வாழ்க ஊடகங்கள் சேவை (வியாபாரம் )/ டோனி எடுத்தது சரியான முடிவா ?

பொதுவாகவே  சில/பல ஆண்களிடம்    உள்ள  ஒரு   குறைபாடு,  ஒரு அழகான  இளம்  பெண்  தன்னை பார்த்து பல்லிழித்தாலோ!  இல்லை  தன்னை  பரிதாபத்துக்குரியவள்!  என்று  காட்டிக்கொண்டாலோ,  எவ்வளவு  கல் நெஞ்சனாக   இருந்தாலும்  அவன்  மனசு   கசிந்து  கரைபுரண்டு  ஓடிவிடுகிறது. (இங்கே  அந்த  பெண்  அழகானவளாக  இருக்க  வேண்டியது  முக்கியம்!) இவ்வாறானதொரு சம்பவம்  தான்  சில  நாட்களுக்கு  முன்னர்   யாழில்  உள்ள ஒரு  பெண்ணுக்கும், வெளிநாட்டிலே உள்ள ஒரு(!) நபருக்கும்  இடையே    நடந்துள்ளது.  இதுவே  நமது வியாபாரிகளுக்கு (இனைய ஊடகம் ) பெரும் தீனியாகி போய்விட்டது.


காதலோ  கவர்ச்சியோ  எதோ  ஒரு வகையில் இருவரும் தொடர்புகொண்டுள்ளார்கள்.  அதுவும்  ஸ்கைப்பிலே  முகம்  பார்த்து  நேரடியாக தொடர்புகொண்டுள்ளார்கள்.  அவ்வாறு அப்பெண்னுடன்   ஸ்கைப்பில்  கதைக்கும்  போது  ஸ்கிரீன் ஷாட்  எடுத்துள்ளார்  குறித்த  "ஏமார்ந்த"  நபர்.  ஆக, ஏமாறுவதற்கு  முன்னர்   'அப்பாவியான'  அந்த  நபர்  எதற்காக  பல கோணங்களில் அப்பெண்ணை   ஸ்கிரீன் ஷாட்  எடுத்தார்  என்பது   இங்கே  கேள்வி?????? 

அத்துடன்,  முன்பின்  தெரியாத  ஒருவர்   தனக்கு   வறுமை ,கஸ்ரம்  என்று சொன்னால்  சில ஆயிரம்  கொடுப்பதே  மிக  பெரிய  விடயம்.  ஆனால்  இந்தநபர்  இலட்சக்கணக்கில்  வாரி வழங்கியுள்ளார்.  அதுமட்டுமல்லாது  அந்த  பெண்ணை  வெளிநாட்டுக்கு  எடுப்பதற்கும்  முயற்சித்தாராம். (பெற்றோருக்கு தெரியாமல்).  ஆக,  அந்த பெண்ணின்  சூழ்நிலையை  (பெண்ணும் சளைத்தவர் இல்லை)  தனக்கு சாதகமாக்கிக்  கொள்ள பார்த்தார்  என்று கொள்ளலாமா????    இவ்வாறு  ஆழமாக  பார்க்கப்  போனால்  இது   இரு  நபர்களின்  தனிப்பட்ட  பிரச்சனை.  அப்பெண்ணும்  ஏமாற்றியுள்ளார்.  அதேபோல  குறித்த  நபரும்  சில  பல  நோக்கங்களை  கொண்டு  கடைசியில்  ஏமார்ந்து  போயுள்ளார்.

ஆனால்  ஒரு  ஊடகம்   இந்த  சம்பவத்தை   'குறித்த  பெண்ணின்  போட்டோவில் இருந்து   தப்பேதும்  அறியா அப்பெண்ணின்  குடும்பம் வரை'  இணையம்  என்ற   பொது வெளிக்கு  கொண்டு வந்து   அசிங்கப்படுத்துவிட்டது.  சரி, ஏமாற்றிய  பெண்ணின்  புகைப்படத்தை போட்டீர்கள்,  எதற்காக  ஏமார்ந்த (!) குறித்த  நபரின்  புகைப்படத்தை போடவில்லை. 


இந்த விடயத்தில்  நம் தமிழ்  இனைய  ஊடகங்களின்  ஒற்றுமை பாராட்டத்தக்கது.  அதாவது,  ஏதாவது  ஒரு  ஊடகம்  பெரும்  பரபரப்பான  ஒரு  செய்தியை  பிரசுரித்தால்,  உடனே  போட்டி  போட்டு  அந்த செய்தி  தொடர்பாக  எந்த  வித உறுதிப்படுத்தலையோ, உண்மை தன்மைகளையோ  ஆராயாது,  வரிக்கி  வரி   அச்சொட்டாக   காபி(copy ) பண்ணி  தமது  பக்கத்திலும்  கொண்டுவந்து  பதித்துவிடுவார்கள்.  வாழ்க இவர்கள் சேவை (வியாபாரம்)
 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கிரிக்கெட்  என்பது  சோம்பேறிகளின்  விளையாட்டு  என்றும் சிலர் விமர்சிப்பார்கள்.  அதை  உறுதிசெய்யும்  விதமாக மேற்கிந்திய தீவுகளுக்கு  எதிரான   இறுதி  டெஸ்ட்  போட்டியிலே  டோனி  எடுத்த  முடிவு  பலரது  விமர்சனத்துக்கு  உள்ளாகி  இருக்கிறது. 

பொதுவாக  விளையாட்டு  வீரனோ,  இல்லை  அணியோ  போராடும்  குணம்  இருந்தால்  தான்  சிறப்பான  ஆட்டத்தை / வெற்றியை   எதிர்பார்க்க முடியும்.   அத்துடன், வெற்றி  தோல்வி  என்பது   இரண்டாம் பட்சம். ஆனால்  வெற்றிக்காக  சற்றேனும்  போராடாது  வெளியேறுவது   என்பது  மிகவும்  கோழை  தனமானது.  அதே போல, டோனி  அந்த  போட்டியில்  எடுத்த  முடிவு  நிச்சயம்  இந்திய  அணி  ரசிகர்களுக்கு  எரிச்சலை தான்  கொடுத்திருக்கும். 

உலக  சம்பியன் அணி ,  டெஸ்ட் தரவரிசையில்  முதல்  இடத்தை  தம்  வசம்  வைத்திருக்கும்  அணி  வாய்ப்பிருந்தும்  முயற்சிக்காமல்  வெளியேறுவது  என்பது  ஏற்றுக்கொள்ள  முடியாத ஒன்று தான்.  தொண்ணூறு  பந்துகளில்  86   ஓட்டங்கள், கூடவே  கைவசம்  இன்னமும்  7 விக்கெட்டுக்கள்,  அதுவும்,  ராவிட், லஷ்மன்,  க்ஹோலி,  டோனி , ஹர்பஜன்,  பிரவீன் குமார்   என்று தொடர்ச்சியாக  துடுப்பாட்டம்  செய்யக்கூடிய  வீரர்கள்.  ஆக   இந்திய  அணிக்கே  சாதகமாக  இருந்தது.  இறுதிவரை  போராடியிருந்தாலும்  தோல்வி என்பது  நிச்சயமாக  ஏற்பட்டிராது.

போட்டியின்  இறுதிநாள்  துடுப்பாட்ட  வீரர்களுக்கு  சாதகமாக  இருக்காது  என்பது  அறிந்து   தான்.   ஆனால்  இலக்கு   ஒன்றும்  அடையமுடியாத தூரத்தில்  இருக்கவில்லை.  எடுக்க வேண்டிய ஓட்டங்களை விட  பந்துகள் அதிகமாகவே தான்   இருந்தது.    இறுதி  பத்து  ஓவர்களிலாவது  இலக்கை  துரத்த  முயற்சி  செய்திருக்கலாம்.  ஆனால் எதையும் செய்யாமல்  அணி  எடுத்த  இந்த  முடிவு  மேற்கிந்திய தீவுகளுக்கே  அதிகம்  சாதகமாக  போய்விட்டது.  இதுவே  இறுதிப்போட்டியில்  வெல்ல வேண்டிய  கட்டாயம் இருந்திருந்தால்  நிச்சயமாக  கடைசி வரை வெற்றிக்காக  போராடியிருப்பார்கள்/வேண்டும்.  ஆனால்  "தொடர்  நம்வசம்  தானே"  என்ற நினைப்போ  என்னமோ  டோனி  இந்த  முடிவு  எடுக்க  காரணமாகி  விட்டது.  

தற்சமயம்  இருபதுக்கிருபது  போட்டிகளின் ஆக்கிரமிப்புக்கு  மத்தியில்  டெஸ்ட்  போட்டிகளிலே  இப்படி  மந்தமான   செயற்பாடுகள், டெஸ்ட் போட்டிகள் தொடர்பில்   சுவாரசியம்  அற்ற  தன்மையையும்  சலிப்பையும்  ரசிகர்கள்  மத்தியில்  உண்டு  பண்ணும்  என்பதில்  ஆச்சரியம்  இல்லை  தான்!

34 comments:

 1. வணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 2. வாழ்க ஊடங்ககள் சேவை (வியாபாரம் )/ டோனி எடுத்தது சரியான முடிவா ?//

  நம்ம சிங்கம் இன்று ஆய்வுக் கட்டுரையோடு கிளம்பியிருக்கே. இருங்க பார்ப்போம்.

  ReplyDelete
 3. பொதுவாகவே சில/பல ஆண்களிடம் உள்ள ஒரு குறைபாடு, ஒரு அழகான இளம் பெண் தன்னை பார்த்து பல்லிழித்தாலோ! இல்லை தன்னை பரிதாபத்துக்குரியவள்! என்று காட்டிக்கொண்டாலோ, எவ்வளவு கல் நெஞ்சனாக இருந்தாலும் அவன் மனசு கசிந்து கரைபுரண்டு ஓடிவிடுகிறது.//

  ஏன் மச்சி, ஆஸ்பத்திரி வீதியிலோ, அல்லது ப்ஸ் ஸ்டாண்டிலோ யாராச்சும் உங்களைப் பார்த்து லுக்கு விட்டிட்டாளுங்களே.

  ReplyDelete
 4. இவ்வாறானதொரு சம்பவம் தான் சில நாட்களுக்கு முன்னர் யாழில் உள்ள ஒரு பெண்ணுக்கும் வெளிநாட்டிலே உள்ள ஒரு(!) நபருக்கும் இடையே நடந்துள்ளது. இதுவே நமது வியாபாரிகளுக்கு (இனைய ஊடகம் ) பெரும் தீனியாகி போய்விட்டது//

  பாஸ், இப்ப யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் இருந்து சாவகச்சேரிக்குப் போறார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. ஆக, ஏமாறுவதற்கு முன்னர் 'அப்பாவியான' அந்த நபர் எதற்காக பல கோணங்களில் அப்பெண்ணை ஸ்கிரீன் ஷாட் எடுத்தார் என்பது இங்கே கேள்வி??????//

  யோ, கொய்யாலா....இது கூடவா தெரியாது, பின்னாடி அந்தப் பெண் ஏமாத்திட்டாலும், இந்தப் போட்டோவை இணையத்தளங்களுக்கு கொடுத்து பேமஸ் ஆகுவோம் என்று எடுத்திருப்பார்.

  இல்லேன்னா தன் நண்பர்களுக்கு காட்டி மகிழலாம் என்ற நினைப்பில் போட்டோ எடுத்திருப்பார்.

  ஹி....ஹி....

  ReplyDelete
 6. ஆக, அந்த பெண்ணின் சூழ்நிலையை (பெண்ணும் சளைத்தவர் இல்லை) தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார் என்று கொள்ளலாமா???? //

  ஆமாம் பாஸ், உங்கள் வாதம் நியாயமானதே. ஊசி இடங் கொடுத்தால் தானே நூல் உள்ளே நுழைய முடியும்.

  ReplyDelete
 7. சரி ஏமாற்றிய பெண்ணின் புகைப்படத்தை போட்டீர்கள், எதற்காக ஏமார்ந்த (!) குறித்த நபரின் புகைப்படத்தை போடவில்லை//

  சரியான கேள்வி, ஒரு வேளை ஏமாந்த நபர் ஊடகத்திற்கு வேண்டிய நபராக இருப்பாரோ.

  ReplyDelete
 8. இந்த விடயத்தில் நம் தமிழ் இனைய ஊடகங்களின் ஒற்றுமை பாராட்டத்தக்கது. அதாவது, ஏதாவது ஒரு ஊடகம் பெரும் பரபரப்பான ஒரு செய்தியை பிரசுரித்தால், உடனே போட்டி போட்டு அந்த செய்தி தொடர்பாக எந்த வித உறுதிப்படுத்தலையோ, உண்மை தன்மைகளையோ ஆராயாது, வரிக்கி வரி அச்சொட்டாக காபி(copy ) பண்ணி தமது பக்கத்திலும் கொண்டுவந்து பதித்துவிடுவார்கள். வாழ்க இவர்கள் சேவை (வியாபாரம்)//

  இந்த நாதரிங்களால் தான் இன்று யாழ்ப்பாணமே சீரழிந்து கொண்டிருக்கிறது.
  சுய சிந்தனை ஏதுமின்றி தாம் வருமானமீட்ட வேண்டும் எனும் நோக்கில் இணையத் தளம் உருவாக்கத் தெரிந்தால் போதும், கக்கூஸ் இருப்பது முதற் கொண்டு,
  பஸ்ஸில் உரசுவது வரை போட்டோ எடுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

  ReplyDelete
 9. கிரிக்கெட் என்பது சோம்போறிகளின் விளையாட்டு என்றும் சிலர் விமர்சிப்பார்கள். அதை உறுதிசெய்யும் விதமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியிலே டோனி எடுத்த முடிவு பலரது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.//

  பாஸ், என்னமோ, ஏதோ தெரியாது, ஆனால் எனக்கு கிரிக்கெட்டை உட்கார்ந்து பார்க்குமளவிற்குப் பொறுமை கிடையாது பாஸ்.

  ReplyDelete
 10. இன்னமும் 7 விக்கெட்டுக்கள், அதுவும், ராவிட், லஷ்மன், க்ஹோலி, டோனி , ஹர்பஜன், பிரவீன் குமார் என்று தொடர்ச்சியாக துடுப்பாட்டம் செய்யக்கூடிய வீரர்கள். ஆக இந்திய அணிக்கே சாதகமாக இருந்தது. இறுதிவரை போராடியிருந்தாலும் தோல்வி என்பது நிச்சயமாக ஏற்பட்டிராது//

  அடிச்சாடியிருக்கலாம், ஒரு வேளை இம் முறை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லட்டும் என விட்டுக் கொடுத்திருப்பாங்களோ...

  ச்....சும்மா.... ஒரு பேச்சுக்கு சொன்னேன் பாஸ்.

  ReplyDelete
 11. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  சரியான வாதம் சகோ..//

  சகோ, இந்த வாதம் தொடர்பான உங்களது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாமல்லவா.

  ReplyDelete
 12. வாய்ப்பிருந்தும்..வெல்ல மனமில்லையோ என்னவோ? தோனிக்கு!

  ஒருவேளை வெஸ்ட் இன்டீஸ் இளம்வீரர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்..!

  இல்லை இளசுகளின் வேகத்திற்கு கொஞ்சம் பின்வாங்கியிருக்கலாம்..!

  எப்படியோ தொடரை வென்றது மகிழ்ச்சியே..!

  ReplyDelete
 13. இந்தியாவின் பாரம்பரிய குணம் தான் இரண்டும்.

  ReplyDelete
 14. இரண்டு விதமான கருத்துகள்..

  இப்படி தொடர்பில்லாமல் தராதீர்கள்
  குழம்பிப் போனேன்..

  ReplyDelete
 15. அருமையான பதிவு தோழரே
  கடுமையாய் சாடியுள்ளீர்கள்

  ReplyDelete
 16. @நிரூபன்- "கக்கூஸ் இருப்பது முதற் கொண்டு,
  பஸ்ஸில் உரசுவது வரை போட்டோ எடுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள்."

  ஹா ஹாஹா....
  இதுதான் நடக்கிறது.உண்மை.

  ReplyDelete
 17. எத்தனையோபேர் அந்தப்பெண்ணிடம் ஏமாந்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.ஆனால்,ஒரே ஒரு நபரது ஆதாரங்கள்தான் வெளியிட்டிருந்தார்கள்.
  அரை நிர்வாணமாக அந்தப்பெண் உரையாடிய புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
  சரி,அரை நிர்வாணமாக உரையாடுமளவுக்கு அந்தப்பெண்ணுக்கும் அந்த ஏமாந்த நபருக்கும் இடையில் என்ன தொடர்பு?
  இவர் உத்தமரென்றால் அரை நிர்வாணமாக உரையாடியதையெல்லாம் ஏன் ஸ்டில் எடுத்தார்???

  ReplyDelete
 18. தோனி கேரியர்ல இது ஒரு சறுக்கல்தான் ....

  ReplyDelete
 19. ஸ்க்ரீன் ஷாட் ரொம்ப பாபுலர் ஆயிடும்போல! நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. சாட்டை, சவுக்கடி பிரமாதம்......!!!

  ReplyDelete
 21. சகோ/அந்தப்பிள்ளையின் சம்பவத்தில எது உண்மை எது பொய் என்று புரியல..
  கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய் என்ற மாதிரித்தான் இந்த விடயமும்.
  ஏனெனில் இப்போதைய ஊடகங்களும் பொறுப்புணர்வற்றதாகவே விளையாடுத்தனமாக சில செய்திகளை வெளியிடுகிறது...
  இதனால் சிலவற்றை நம்ப முடியல.ஆனால் ஏதோ ஒன்று நடந்திருக்கு என்று மட்டும் விளங்கிறது...இது எனது கருத்து...
  உங்கள் அலசலிற்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 22. சில நேரங்களில் ஏற்கனவே பெற்ற வெற்றியைத் தக்க் வைத்துக் கொள்ளத் தற்காப்பு அவசியமாகிறது.தோல்வியைத் தவிர்ப்பதே இங்கு வெற்றிதான்!இதுவே சரியான உத்தி,செயல்திட்டம்!

  ReplyDelete
 23. என்னய்யா மேட்டர்..ஏதாவது லின்க் கொடுங்கய்யா..ஒன்னும் புரியலை.

  ReplyDelete
 24. வணக்கம் பாஸ்
  இந்த விடயத்தில் யாருக்காக கதைப்பது என்றே தெரியவில்லை. காரணம் இரு பக்கமும் தவறு இருக்கிறது.. ஒரு சாரரை மாத்திரம் குறை கண்டு பலன் இல்லை

  ReplyDelete
 25. ஆனால் இந்த விடயத்தில் ஊடகங்களின் அத்துமீறிய செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது

  ReplyDelete
 26. அப்புறம் கிரிக்கட் பற்றி நம்மளுக்கு ஒன்னுமே தெரியாது... ஹி ஹி

  ReplyDelete
 27. தோனிக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி... ஏனோ அன்று ரஸ்க் கிடைக்கவில்லை போலும்...

  ReplyDelete
 28. தப்பு அந்த பெண் , ஆணை விட , அந்த அதிரும் இணையம் மீதே ,
  தப்பு இருவர் மீதும் இருக்கும் போது, அந்த பெண்ணின் மீது மட்டும் பலி போட்டு செய்தி வெளியிட்டது
  ரெம்ப உள்நோக்கம் கொண்டது, அந்த ஏமாந்த ஆண் இந்த செய்தி வெளியிட்ட இணைய நிர்வாகியின் நண்பன் என்பதுதான்
  இதன் காரணம்,

  ReplyDelete
 29. //எதற்காக ஏமார்ந்த (!) குறித்த நபரின் புகைப்படத்தை போடவில்லை//

  இதுதான் என் கேள்வியும்

  ReplyDelete
 30. நல்ல பதிவு.. தோனியின் முடிவு தோல்விக்கு பயந்த ஒருவரின் முடிவு,,

  ReplyDelete
 31. நீங்க சொன்ன முதல் தகவல் நீங்கதான் முதலில் பதிவு செய்தீர்களா?இதே தகவலை வேறு ஒரு தளத்தில் படித்தேனே!

  ReplyDelete
 32. ///ராஜ நடராஜன் said...

  நீங்க சொன்ன முதல் தகவல் நீங்கதான் முதலில் பதிவு செய்தீர்களா?இதே தகவலை வேறு ஒரு தளத்தில் படித்தேனே!
  //என்ன பாஸ் குண்டை தூக்கி போடுறீங்க ! யாரு அது , கூகுளே தேடி பார்த்தேனே , அப்படி ஒன்றும் வரவில்லையே ...

  ReplyDelete
 33. நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி.!

  ReplyDelete