என்ன கொடும சாமி இது..?

சின்ன  வயசில பாடசாலையில் படிக்கும் போது  வரலாறு  ஆசிரியர்  "முனை" என்பதற்கு  பின்வருமாறு  வரைவிலக்கணம் கொடுப்பார்,    " கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி முனை எனப்படும்" னு ..   பருத்தித்துறை முனை, பவுல் முனை, தெய்வேந்திர முனை என்று அதற்கு சில உதாரணமும் சொல்லுவார். இலங்கை வரைபடத்தை பார்த்தால் விளக்கம் புரியும்.

இதே போல  இப்ப நம்மவர்கள் ஒன்றை உருவாக்கி  உள்ளார்கள்..! என்ன தெரியுமா!  "அசையும் அசையா பொருட்களில்  நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி பிள்ளையார் எனப்படும்"  

என்னடா கடவுளை கிண்டல் பண்ணுறான்' னு நினைக்காதீங்க.  கீழே பாருங்க கொடுமைகளை..

 


[ நம்மாக்கள் புத்திசாலிகள், எந்தப்பக்கம் நீட்டிக்கொண்டிருந்தாலும் அதுக்கு அலங்காரம் பண்ணி ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். ]

வாழும் உலகில் கடவுளை கண்டவர் என்று  இது வரை எவரும் இல்லை. (யாரப்பா அது நித்தியானந்தா சாமி'னு சொல்லுறது ).  அதேபோல கடவுள் என்பவர்  இப்படி  தான் இருப்பார்  என்று அவருக்கு உருவம் கொடுத்தவன் மனிதன் தான்.  இதெல்லாம் மரம் செடி கொடி காய்கறி பழங்களுக்கு எப்படி தெரியும்..

அழகான கோவில் கட்டி வச்சால், இப்படி  அடுத்தநாள் பட்டு போகும் மரங்களில் வந்து கடவுள் குடி கொள்வதன் நோக்கம் தான் என்ன!
இப்படியான மூட நம்பிக்கைகள் நம்மவர்களிடம் மட்டும்மல்ல மேற்கத்தேய நாட்டவர்களிடமும் உண்டு. அவ்வப்போது ஜேசு கண்ணில் இருந்து ரத்தம் வருது  கண்ணீர் வருது என்று  செய்தி உலாவும் பின் அமிழ்ந்துவிடும். ஆனால் ஒப்பீட்டளவில் நம்மவர்களின் செயற்ப்பாட்டை விட மிக மிக குறைவு.

(சிங்களவர்கள் கண்ணில் படும் அரச மரத்துக்கெல்லாம் வெள்ளை துணியால் சுத்தி விடுவார்கள்.  நம்மவர்கள் கண்ணில் படும்  ஆலமரத்துக்கெல்லாம் கலர்த்துணியால் சுத்திவிட்வார்கள்.  இந்த விடயத்தில் மட்டும் ......! )33 comments:

 1. எல்லாம் உண்டியல் வசூல் பண்ணத்தான்

  ReplyDelete
 2. ///koodal bala said...
  எல்லாம் உண்டியல் வசூல் பண்ணத்தான்///உண்மை தான் இதுவும் ஒரு காரணம் ...

  ReplyDelete
 3. "அசையும் அசையா பொருட்களில் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி பிள்ளையார் எனப்படும்"
  நல்ல வரைவிலக்கணம் சகோ . உண்மைதான் . நம்பவரகளுக்கு சிறிது மறுபட்டிருந்தாலே அது கடவுள் , கடவுளின் அவதாரம் என போற்றி பாட தொடங்கிவிடுவார்கள் .

  ReplyDelete
 4. patangkalum munikkaana vilakkamum sariyaaka thaan irukkirathu ariviyal poorvamaaka vilakkiyamaikku nanri.. vaalththukkal

  ReplyDelete
 5. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

  ReplyDelete
 6. என்ன கொடுமை சாமி இது ?

  இந்த வாரம் என்ன கடவுள் எதிர்ப்பு வாரமா ?

  எல்லோரும் அவரை போட்டு தாக்குகிறீர்கள் ?

  சரி இது சுதந்திர இந்தியாவாச்சே ?

  எல்லாம் வல்ல இறைவனருளால்
  வாழ்க வளமுடன்..

  ReplyDelete
 7. Your statement is correct. . .

  ReplyDelete
 8. வணக்கம் கந்தசாமி அவர்களே,

  கருத்து கந்தசாமியாக நடிகர் விவேக் சொல்வது போல இருக்கிறது தங்கள்
  கருத்து..

  இதில் தவறு இருப்பதாக கருதக் கூடாது..

  அது அன்பின் வெளிப்பாடு..

  காண்கின்ற எல்லா பொருட்களிலும்
  இறைவனை பார்ப்பது என்பது
  ஒரு உயர்ந்த பக்குவ நிலை
  ஒரு உன்னத பக்தி நிலை...

  அது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை..

  இதைத்தான்

  திருமந்திரம்,

  மரத்தில் மறைந்தது மாமத யானை
  மரத்தை மறைத்தது மாமத யானை

  என்று சொல்லும்..

  இதே கருத்து மக்கள் வழக்கில்,

  கல்லைக் கண்டால்
  நாயைக் காணோம்

  நாயைக் கண்டால்
  கல்லைக் காணோம்

  என்று சொல்வார்கள்..

  மேலும் தாயுமான சுவாமிகள்
  எல்லாவிடத்திலும் இறைவனை பார்த்து பழகிவிட்டு ,

  ஒரு நாள் பூசைக்காக மலர் பறிக்க சென்றார்..

  அந்த மலரில் இறைவன் தெரிவதை கண்டு மலர் பறிக்காமலேயே வந்துவிட்டார்.

  பார்க்கின்ற மலரோடு நீயே இருத்தி

  என்பது தாயுமானவர் திருவாக்கு..

  எனவே பார்க்கின்றவர்களுடைய
  மனோநிலையை பொறுத்தே
  கருத்தும் அமையும்..

  உங்கள் பார்வைக்கு அது கேலியாக தெரிந்திருந்தாலும்,

  எங்கெங்கு காணினும் சத்தியடா

  என்ற மகாகவியின் வாக்கினை
  மெய்ப்பிக்கும் வகையில் தங்களுடைய
  இந்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன - அவ்வகையில்
  தங்களுக்கு நன்றி..

  ReplyDelete
 9. ////எனவே பார்க்கின்றவர்களுடைய
  மனோநிலையை பொறுத்தே
  கருத்தும் அமையும்..

  உங்கள் பார்வைக்கு அது கேலியாக தெரிந்திருந்தாலும்,
  ////ஆயிரமாயிரம் மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது வராத கடவுள் இப்பிடி மரங்களிலும் பழங்களிலும் வருகிறார் என்று மக்களை நம்பவைப்பதை பார்த்தால் கேலியாக இல்லை மாறாக நம்மவர்களின் மூட நம்பிக்கைகளை பார்த்து பரிதாபம் தான் வருகிறது.

  ReplyDelete
 10. ///சரி இது சுதந்திர இந்தியாவாச்சே ?/// நண்பா நான் இந்தியா அல்ல ...

  ReplyDelete
 11. கடவுள் என்பதே போலி. இதற்குள் அந்த பெயரை வைத்து இன்னும் ஆயிரமாயிரம் போலிகள்.. எப்போதுதான் இந்த உலகம் திருந்தப்போகிறதோ?

  இன்று என் பதிவில்
  ப்ளாக்கரில் Drop-Down Navigation Bar உருவாக்குவது எப்படி?

  ReplyDelete
 12. கடவுள் உண்மையா என்பது பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன் ஒருதடவை வந்து பாருங்கள்
  கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

  ReplyDelete
 13. உலகத்தின் எல்லா பொருட்களிலும் கடவுள் அடங்கியுள்ளார்...

  ReplyDelete
 14. நம்பிக்கை வேறு;மூட நம்பிக்கை வேறு.நான் முழு ஆத்திகன்தான். ஆனால் இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடில்லை!
  ”மரத்தை மறைத்தது”திரு மந்திரப்பாடலின் விளக்கம் இங்கே-
  http://chennaipithan.blogspot.com/2007/08/blog-post_2288.html

  ReplyDelete
 15. அவர்களுக்கு இச்செயல்கள் நம்பிக்கை அளிக்கிறது போலும்.

  ReplyDelete
 16. கந்தசாமி உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன்!
  ஒருவருக்கு நம்பிக்கை உள்ள விடயங்கள் இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லாது இருக்கலாம்! சிலருக்கு சிலவற்றை செய்யும்போது மன நிறைவை கொடுப்பது இன்னொருவருக்கு கொடுக்காமல் விடலாம். அதற்காக அவர்கள் செய்வது பிழை இல்லை என்றில்லைதானே! ஏன் இங்கே பிறந்தோம் என்பதற்கு இன்னும் சரியான விடை ஒருவரிடமிருந்தும் வராதபோது ஏன் இவர்கள் செய்வதுமட்டும் பிழையென்று சொல்வது?

  ReplyDelete
 17. இதே போல இப்ப நம்மவர்கள் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்..! என்ன தெரியுமா! "அசையும் அசையா பொருட்களில் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி பிள்ளையார் எனப்படும்" //


  அட....அட...
  என்ன ஒரு புதுமையான விளக்கம், எம் தமிழ் நம்பிக்கையாளர்களை அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறீங்களே.

  ReplyDelete
 18. பாஸ், இந்த நம்பிக்கைகள் எனக்குச் சில வேளைகளில் காமெடி போன்று இருக்கும்.

  பிள்ளையார் பால் குடிக்கிறார் எனப் பல கோணங்களில் எங்கள் மக்கள் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

  எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் சித்து விளையாட்டுக்கள் என்று தான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 19. கொடுமையிலும் கொடுமை.
  சுவிஸ்லயும் ஒரு காலத்தில பிள்ளையார் பால் குடிச்சவர் தெரியுமோ.வெக்கக்கேடு !

  ReplyDelete
 20. வணக்கம் அன்பு நண்பர் சென்னை பித்தன் அவர்களே,

  இறைநம்பிக்கை உண்டு என்று சொன்னீர்களே அதற்கு முதற்கண் மகிழ்ச்சி..

  //”மரத்தை மறைத்தது”திரு மந்திரப்பாடலின் விளக்கம் இங்கே-
  http://chennaipithan.blogspot.com/2007/08/blog-post_2288.html//

  தங்கள் தளத்திற்கு சென்று வாசித்தேன்..

  எந்த ஒரு பாடலுக்கும் அவரவர் அறிவின் துணை கொண்டு விளக்கம் எழுதலாம்..

  திருக்குறளுக்கு உரை எழுதாதவர்கள் யார் ?

  நீங்களும் நானும் தான்..

  அதுபோல இந்த திருமந்திரத்திற்கு
  நீங்கள் அறிந்தவரை உரை எழுதியிருக்கிறீர்கள் அவ்வளவே..

  அதுமட்டுமல்ல.
  நீங்கள் தந்தது சொல்லுக்கு பொருளே
  தவிர

  அந்த சொற்களுக்குள் ஒளிந்திருக்கும உண்மைக்கு பொருள் அல்ல..

  அதாவது நீங்கள் உவமானத்திற்கு மட்டும் உங்கள் பதிவில் விளக்கம் தந்திருக்கிறீர்கள்..

  உவமானத்தால் சொல்ல வந்த , சொல்ல வேண்டிய விசயத்திற்கு விளக்கம் சொல்லாமல் போனால் எப்படி ?

  நான் சொன்னால் கூட தவறு என்பீர்கள் வாய்ப்பிருந்தால்,

  திருமந்திர விளக்கவுரை,
  திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்ட ( முதல் பதிப்பு - 1942 ) உரையை வாங்கிப் படியுங்கள்..

  உண்மை விளங்கும்..
  என் சொல்லில் உள்ள உண்மை விளங்கும்..

  யாருக்காகவும் எதற்காகவும்
  உண்மையை விட்டுத் தராதீர்கள்..

  அன்புடன் வணக்கம்..

  http://sivaayasivaa.blogspot.com

  ReplyDelete
 21. சகோ எப்படி உங்களுக்கு இப்படி சிந்தனை வந்தது.....முனை என்று பெயரும் வைத்து.............
  இதை நானும் கூட நினைக்கிறனான்....
  என்ன செய்ய அவரவர் மனம்...
  ஐயர்மாரிடம் மாட்டிவிட்டிடாதே நண்பா...

  ReplyDelete
 22. என்னத்த சொல்ல எல்லாம் செப்படி வித்தை ஒரு பொல்லாப்பும் இல்லை

  ReplyDelete
 23. பிந்திய வருகைக்கு மன்னிக்கவும் பாஸ்
  தம்பி பிறந்தநாள் விழாவால் கணணிப்பக்கம் வரவில்லை
  அதான் உங்கள் பதிவை பார்க்க தவறி விட்டேன்

  ReplyDelete
 24. படங்கள் அசத்தல் பாஸ்
  கலைநயம் மிக்க படங்கள்

  ReplyDelete
 25. நம்மவர் சும்மா இருக்கும் கல்லையே சிவன் ஆக்குவவர்கள்
  இப்படி அழகுமிக்க பொருள்கள் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன ??
  ஏமாறுபவன் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்

  ReplyDelete
 26. அழகான படங்கள் ஒவ்வொருத்தரின் நம்பிக்கைகள் மாறுபடுகிறது இப்படி எல்லாம் மக்கள் திசைமாறுவதால் தான் சில மரங்களை காப்பாற்ற முடிகிறது பாஸ் இல்லை என்றால் நம் இனத்தைப் போல் சாகடிச்சிடுவாங்க!

  ReplyDelete
 27. உங்கள் தலையங்கம்தான் இதற்கு சரியான பதில்...

  ReplyDelete
 28. நண்பர்களே நம்ம பக்கம்!!!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!!!!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

  ReplyDelete
 29. என்னுடைய நண்பனின் வயிறு பிள்ளையாரின் வயிறு போன்று பெரியது அவனை நான் பிள்ளையார் என்று வணங்கப்போகிறேன்.

  ReplyDelete
 30. என்னத்த சொல்ல எல்லாம் செப்படி வித்தை ஒரு பொல்லாப்பும் இல்லை

  ReplyDelete