சினிமா /வசதியான முதியோர் இல்லம்... புரியல்லீங்க..

சினிமா நடிகரோ, கிரிக்கட் வீரரோ ஒருவரின் திறமை மீதான ரசிப்புத்தன்மைக்கும் ,தனி மனித வழிபாடுக்கும் என்ன தான் வித்தியாசம்!  ஒரு ரசிகனின் ரசிப்புத்தன்மை எவ்வாறு தனி மனித வழிபாடாக மாறுகிறது!  நான் நினைக்கிறேன்,  ஒருவரின்  திறமை மீதான  ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகும் போது  அதுவே தனிமனித வழிபாடாக மாறிவிடுகிறதோ!! ... 

காரணம்,  இவ்வாறு ரசிகர்களை-அபிமானிகளை கொண்டிருப்பவர்கள்  தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாலும்,  தவறான கருத்துக்களை கூறினாலும் அதை நியாயப்படுத்துகிறான் தன்னை "ரசிகன்" என்று சொல்லிக்கொள்பவன். மீறி  யாராவது விமர்சித்தால் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறான்.  உச்சகட்டமாக,  'தன் நாயகன் விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்' என்று கூட சொல்கிறான். 
ஏன் இப்படி...!

தான் ரசிக்கும் ஒருவர் எவ்வாறான  கருத்துக்களை  சொன்னாலும், எவ்வாறான செயல்களை செய்தாலும் அவற்றை  தன்கருத்தாக,  தன் செயலாக  எண்ணி   நியாயப்படுத்துவதற்கு  ரசிகனின் ரசிப்புத்தன்மை தாண்டிய  தனி மனித வழிபாடு தான்  உந்து சக்தியாக அமைந்துவிடுகிறதா..?? ஒண்டுமே புரியல்லீங்க!!  இந்த விடயத்தில் பல தடவைகள் நண்பர்கள் மத்தியில் முரண்பட்டிருக்கிறேன். 

நான் கூட சச்சினின் ரசிகன். அதாவது, சச்சினின் துடுப்பாட்ட திறமையை ரசிக்கும் ஒரு ரசிகன்.  ஆனால், யாராவது சச்சினை பற்றி விமர்சித்தால்  கோபம் வருவதுமில்லை, கண்ணை மூடிக்கொண்டு சென்று சண்டை பிடிப்பதுமில்லை. விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை தானே!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பொதுவாகவே நான் தொலைக்காட்சி நிகழ்சிகள் பார்ப்பது குறைவு. இணையத்தில் மேயவே பல இரவுகள் நித்திரையை தியாகம் செய்யவேண்டியுள்ளது.  இருந்தும்  சமீபத்தில்  எதேட்சையாக  இங்கே உள்ள   தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில்  ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிலுள்ள தம் பெற்றோர்களை கூப்பிட்டு இங்குள்ள முதியோர் இல்லத்தில் விடுவதை பற்றி உங்கள் கருத்து என்ன?  என்ற ரீதியில் நேரடி தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.

அழைப்பு எடுத்த எல்லோரும் அவ்வாறு முதியோர் இல்லத்தில் விடுவது தவறு என்ற ரீதியிலே, தமது கருத்துக்களையும் கூறி விவாதித்துக்கொண்டிருந்தார்கள் . 

ஆனால், ஒரு அறிவாளி!,  அழைப்பை ஏற்படுத்தி சொன்ன கருத்து என்னை எரிச்சல் பட வைத்துவிட்டது.  " நாட்டிலே இருக்கிற முதியோர் இல்லங்கள்  வசதி குறைந்தது, அதோட நல்ல பராமரிப்பு முறையும் இல்ல. ஆனா, இங்க அப்படி இல்ல. இங்க உள்ள முதியோர் இல்லங்கள் மிகவும் வசதியானவை. நாங்கள்  வீட்டிலேயே வைத்து எங்கட  பெற்றோரை கவனித்துக்கொள்வதை விட அவர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள். ஆகவே அவர்களை இங்குள்ள முதியோர் இல்லத்தில் விடுவது தவறில்லை " என்று தனது மனசில் இருந்ததை கக்கினார். 

ஆதாவது, அவர் சொல்ல வருகிறார் 'நாட்டிலே உள்ள முதியோர் இல்லங்கள் வசதியாக இல்லை. அதனால, அவர்களை இங்கே கூப்பிட்டு வசதியான முதியோர்  இல்லத்தில்  விடுகிறேன்.' 

அவரின் இறுதி நோக்கம் என்னமோ முதியோர் இல்லத்தில் விடுவது தான். ஆனால், அதிலும் அவருடைய கொள்கை, ஒரு நல்ல  வசதியான முதியோர் இல்லத்தில் தான் விட வேண்டும். 

பிள்ளை கடைசி காலத்தில என்னை அன்பாய், அரவணைப்பாய் பார்த்துப்பான்  என்று பெற்றதுகள்  நம்பி இருந்தா,  இதுகள்  வசதியான முதியோர்  இல்லம் தேடி அலையிதுகள். நாட்டில சும்மா இருக்குறதுகளை  கூப்பிட்டு முதியோர் இல்லத்தில் விடுகிறார்களாம். இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் தான் பாருங்கோ!  மனுசனுக்கு பசி வந்தா மட்டுமில்ல, பணம் வந்தாலும் அவனுள் இருக்கிற எல்லாம் பறந்துவிடுமோ..!    ஒண்டுமே புரியல்லீங்க!!


34 comments:

 1. அய்.... நானா முதல் :)
  வெயிட் படிச்சுட்டு வாறன்

  ReplyDelete
 2. திருந்த மாட்டார்கள் நண்பரே...

  ReplyDelete
 3. ஆஹா அம்பி முந்திட்டானே

  ReplyDelete
 4. இரண்டு விடயத்திலும் நான் உங்களோடு ஒத்து போகிறேன்.....
  கூகிளுக்கு ஏன் இந்த வேலை?????

  ReplyDelete
 5. மனசை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வாழ்பவர்கள் இவர்கள் நண்பா
  நாளை இவர்கள் பிள்ளை செய்யும் போது உறைக்கும் இவர்களுக்கு

  ReplyDelete
 6. "கற்றது தமிழ்" துஷ்யந்தன்.... உபிடித்தான் நான் இண்டைக்கு என்னொரு பதிவுக்கு முதல் கருத்து என்று நினைத்து இட அதுக்கு கொஞ்சம் முதல் யாரோ எனக்கு ஆப்பு அடிதுவிட்டார்கள்... இந்த முறை எனக்குதான்......

  கூகிளுக்கு ஏன் இந்த வேலை?????

  ReplyDelete
 7. voted 3 to 4
  //மனுசனுக்கு பசி வந்தா மட்டுமில்ல, பணம் வந்தாலும் அவனுள் இருக்கிற எல்லாம் பறந்துவிடுமோ..! //

  ஆம். அப்படித்தான் போலிருக்கு.
  மனித குணம் எல்லாம் பறந்து போய் மிருக குணம் ஏற்பட்டுவிடுகிறது.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 8. மாப்பிள இங்கு வயதானவர்களை அழைப்பது என்பது என்னைப் பொருத்தவரை நல்லதல்ல அவர்கள் அங்கு கோவில் குளமெண்டு ஓடித்திரிந்தவர்களை இங்கு வீட்டில் அடைத்து வைப்பதென்பது கொடுமையான விடயம்..

  அதை விட இங்கு வயதானவர்களை சிலபேர் அரசாங்க உதவிவாங்கவும் தமது பிள்ளைகளை பார்கவும்தான் வைத்திருக்கிறார்கள்..

  எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வயதான தம்பதிகளை கூப்பிட்டு கணவரை அண்ணனின் பிள்ளைகளை பார்கவும் மனைவியய் தம்பி வீட்டிலும் பிள்ளை பார்க விட்டுள்ளார்கள்..

  வாழ்கையின் கடைசி காலத்தில் இருக்கும் ஒரு தம்பதியை எங்கள் சுய நலத்திற்காக இப்படி செய்யலாமா..!?

  பின் குறிப்பு
  இந்த தம்பதிகள் இப்போது தங்களுக்கு பிள்ளையும் வேண்டாம் குட்டியும் வேண்டாம்ன்னு ஒரு முதியோர் இல்லத்தில் அடைக்லமாகியுள்ளார்கள்.. வெகு விரைவில் நாடு திரும்பவுள்ளார்கள் அன்மையில் காட்டான் அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்ட தகவல்கள் இவை ....!

  காட்டான் குழ போட்டுட்டான்..

  ReplyDelete
 9. ஆகுலன் வர வர நீ ரெம்ப மோசமய்யா.. பின்ன என்ன எல்லாற்ர வீட்டிலேயும் நிக்கிறீயே ஐய்யா..

   இப்ப உனக்கு பள்ளி கூட லீவு போல தெரியுது சரி சரி நடத்து நடத்து .. 

  ReplyDelete
 10. விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை //

  Nice...

  ReplyDelete
 11. நீங்கள் சொன்ன இரு விடயங்களிலும் உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்..
  பெற்றோரை காக்கும் இல்லங்களில் விடுவது போன்ற கொடுமையான இழி செயல் வேறேதும் கிடையாது சகோ..

  ReplyDelete
 12. நீங்கள் சொன்ன இரு விடயங்களிலும் உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்..
  பெற்றோரை காக்கும் இல்லங்களில் விடுவது போன்ற கொடுமையான இழி செயல் வேறேதும் கிடையாது சகோ..

  ReplyDelete
 13. பணம் பந்தியிலே..
  குணம் குப்பையிலே..

  என்று அன்றே பாடி வைத்தான் கவிஞன்..

  கவலைப்படாதீக கந்தசாமி..

  காலம் மிகச் சிறந்த போதகர்..
  அது யாராயினும் அவ்ர்களுக்குப்
  பாடம் தந்தே தீரும்..

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 14. //ஆனால், ஒரு அறிவாளி!, அழைப்பை ஏற்படுத்தி சொன்ன கருத்து என்னை எரிச்சல் பட வைத்துவிட்டது//

  இப்படிக் கதைக்கும் அறிவாளியுடன் ஒரே வீட்டில் இருப்பதைவிட முதியோர் இல்லங்கள் எவ்வளவோ பரவாயில்லை!

  ReplyDelete
 15. வெளிநாடுகள் மனிதனின் சொந்த பந்தங்களை அறுத்து முழு நேர தொழிலாளி ஆக்கிகின்றது
  அதனால் பெற்றோரை இல்லத்தில் விடுகிறார்கள்.

  ஆனால் நம்ம ஊருக்கு என குறைச்சல் சொந்தம் பந்தபே பார்த்துக்கொள்ளும் முதியோரை

  இரண்டாவது விடயம் சமந்தமாய் கனக்க விடயங்களை சிந்திக்க முடிகிறது. சிந்தனைக்கு எழுத்துரு கொடுக்க முடியவில்லை.

  வாய்ஸ் மெயிலில் கமெண்ட்ஸ் சொல்லும் வசதி ப்லோக்கேரில் இருந்தா கனக்க கமெண்ட்ஸ் சொல்லலாம்

  துக்கம் கண்ண கட்டுது

  ReplyDelete
 16. பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்..அந்த பத்தில் ஒன்றா பாசம்?

  நல்ல பகிர்வு நண்பரே.

  ReplyDelete
 17. கடவுள் கூட விமர்சனத்துக்கு உள்ளே. ஒரு தவறை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை.

  ReplyDelete
 18. நல்ல பதிவு மாப்ள!

  ReplyDelete
 19. என்னதான் மனுஷங்களோ ....

  ReplyDelete
 20. இன்னும் எதிர் காலத்தில் பணம் தான் அத்தனையையும் தீர்மானிக்கப்போகிறது...

  இதில் பாசம் பந்தம் அன்பு ஆகியவற்றிற்க்கு இடமே இல்லை...

  தங்களின் உணர்வு புரிகிறது...

  ReplyDelete
 21. எல்லாம் சுயநலம் அன்றி வேறென்ன சொல்ல!!??

  ReplyDelete
 22. //ஒருவரின் திறமை மீதான ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாக மாறிவிடுகிறதோ!! ... //

  yes,good post

  ReplyDelete
 23. வருத்தமான செய்தியே!

  ReplyDelete
 24. முதியோர் இல்லம் பெருக சுய நலமும்
  சகிப்புத்தன்மை குறைந்து போதலுமே முழுமுதற் காரணம்.
  ரசிகர்கள் குறித்த தங்கள்கருத்து மிக மிகச் சரி
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. முதியோர்......ம்ம் என்ன பண்ண பாஸ்...
  அப்புறம் என்ன டி வி பாக்கிறது குறைவோ??
  ஒரே டிவியோட தான் எண்டு பேச்சு விளுதாமே!!

  ReplyDelete
 26. நம் நாட்டின் சூழ்நிலையல் சில யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  புலம் பெயர்ந்து பெற்றவர்களை விட்டுவிட்டு வந்திருக்கிறோம்.
  அவர்களும் விரும்பியே உயிர் காக்க அனுப்பிவிடுகிறார்கள்.

  அவர்களை இங்கு அருகில் வைத்துக் கவனிக்க முடியாது.கணவன் மனைவி இருவருமே வேலை,
  குழந்தைகள்,போக்குவரத்து என்றூ 24 மணித்தியாலம் போதாத நிலைமை.சரி...ஊரிலும் பார்க்க யாருமில்லையென்றால் என்னதான் செய்ய முடியும்.விருப்பத்தோடு வயோதிபர் மடம் யாரும் பெற்றவர்களை விடமாட்டார்கள்.
  அதுவும் நம்மவர்கள்.சூழ்நிலை மாறித்தான் ஆகவேண்டும்.
  வழியில்லை.மனம் வலிக்கத்தான் இதை எழுதுகிறேன்.ஆனால்... !

  ReplyDelete
 27. இதை போன்ற ஒரு இழி செயல் எதுவுமில்லை நண்பா
  என்னதான் விளக்கம் கொடுத்தாலும் பெற்றோர்கள் நம் அருகில் வைத்து காப்பதே நல்லது . நல்ல பகிர்வு சகோ

  ReplyDelete
 28. பத்தையும் பறக்கச்செய்யும் பணம் படுத்தும் பாடு..

  ReplyDelete
 29. nalla pathivu..
  eRrukkollakkudiya vidayamthaan..
  vaalththukkal,,

  ReplyDelete
 30. இன்றைய எமது பதிவை முழுமையாக பொறுமையாக படியுங்கள் நண்பரே..

  இது தங்கள் பொருட்டு எழுதப்பட்டது.

  http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html


  நன்றி...

  ReplyDelete
 31. நல்ல பதிவு ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 32. 'நாட்டிலே உள்ள முதியோர் இல்லங்கள் வசதியாக இல்லை. அதனால, அவர்களை இங்கே கூப்பிட்டு வசதியான முதியோர் இல்லத்தில் விடுகிறேன்.'//

  வெளி நாட்டு மோகத்தினதும், நன்றி மறந்த சுய நலத்தினதும் வெளிப்பாடு தான் இது என்று நினைக்கிறேன். உங்களது காத்திரமான பதிவுக்கு ஒரு சல்யூட்.

  எம்மவர்கள் வெளிநாட்டவர்களைப் பின்பற்றித் தம் பெற்றோரையும் புறக்கணிக்கும் நிலையினை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது பாஸ்.

  ReplyDelete