அனுபவங்களில் ஒன்று..!
ஆரம்ப நாட்கள் கொடுத்தது
அறிமுகம் இல்லாத பல
முகம்களையும் மட்டுமல்ல
அச்சத்தையும் சேர்த்து தான்!

இன்னும் பல வருடங்கள்
முதுகிலே சுமையும்
மூளையில் அறிவையும்..,
நினைக்கும் போதே
நெஞ்சை கனத்த சோகம்..!

இயற்கையின் நியதியை மீறி
அந்த நாட்களின் இரவுகள்
விடியாத பொழுதுகளாகவே
இருந்துவிடக்கூடாதா? என்று
இறைவனை வேண்டிக்கொள்ளும் வயசு..!

மாலைப் பொழுதுகளில் கிடைக்கும்
சிறு சிறு சந்தோசங்களை எல்லாம்
களைந்து போய்விடும்
காலை நேரக் கணப்பொழுதுகளில்,
அம்மாவின் அதட்டல்களிலும்
அயலவர்கள் கிண்டல்களிலும்
பிடிவாதங்கள் அத்தனையும்
பிடிமானம் அற்றதாகிவிடும்!

'சிறகு முளைத்துப்
பறக்க நினைக்கையிலே
சிறைக்கு அனுப்புவதா?...'
சலித்துக்கொள்ளும் மனசு!!

பால்ய வயசினிலே,
பள்ளி செல்ல தொடங்கும் நாட்களின்
பலரது அனுபவங்கள்
இவை தானே!!

இன்றைக்கு புதுவருடப்பிறப்பாம் என்று "அம்மா" சொல்லியிருக்கு.. :P ஆக , அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

9 comments:

 1. நல்ல கவிதை...ஆமா இன்னைக்கு நெசமாவே புது வருசமா......????

  ReplyDelete
 2. புது வருடம்!! ம்ம்ம் அனுபவம் பலருக்கு பலது தந்துவிட்டுச் செல்லுது! கவிதை கண்டு ரசித்தேன்.

  ReplyDelete
 3. வணக்கம் கந்தசாமியண்ணே!கவிதை.....................என்ன எழுத?கொடுமைகள் தொடர்கின்றன.என்ன செய்ய?தெய்வம் நின்றறுக்குமா?பார்க்கலாம்.நந்தன வருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 5. பால்ய வயது மனதை அழகாக சொல்லியிருக்கிறியள் கந்து.

  ReplyDelete
 6. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் கந்து.பாடசால,பள்ளியென சுமைகளை மனதிலும் முதுகிலும் ஏற்றத்தொடங்கிய காலங்களை அசைபோட வைக்கிறது கவிதை.நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு !

  ReplyDelete
 7. கந்து என்ன பழைய நினைவோ... ஆனாலும் கவிதை சூப்பர்.... நம்மளையும் எங்கையோ கொண்டு போகுது....... :(

  ReplyDelete