சாக்லேட் பிரியர்களுக்கு..

பெரியவங்கள் முதல் சிறியவங்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் .சிறியவங்களை பொறுத்த வரை அதிகளவான சாக்லேட்டை பெற்றோர்களின் கண்டிப்பை மீறியும் திண்டு தீர்த்துடுவார்கள்.ஆனால் ஓரளவு வயதுக்கு வந்தவுடன் சாக்லேட் என்றாலே ஒருவித பயம்."இதை  சாப்பிட போய் நோய்கள் வந்துடுமோ" என்று. ஆனால் சாக்லேட் தொடர்பான ஆய்வுகள் எமக்கு இனிப்பான முடிவுகளையும் தந்துள்ளன.
 

    ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாக்லெட் தின்றால், அது அரை மணிநேரம் உடற்பயிற்சிசெய்வதால் ஏற்படும் பயனை தருகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாக்லெட்டை தினமும் தின்றால், அவர்களுக்கு மாரடைப்பு, பக்க வாதம் ஆகியநோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

சாக்லெட்டுகளில் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டுக்களில் பிளவானோல்ஸ் என்ற ரசாயன பொருள் உள்ளது. அது ரத்த குழாய்களில் ரத்தம் தாராளமாக ஓட உதவுகிறது. ரத்த அழுத்தநோயும் 5 சதவீத அளவுக்கு குறைகிறது என்று கூறியிருக்கிறார்கள்.
 
           எப்படி  இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும்   நஞ்சாகிவிடும் என்பது பொய்யாகிவிடாது.
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!

2 comments:

 1. குழந்தைகள் தின சிறப்பு பதிவா...
  இன்ட்லியில் இணைக்கவில்லை போல...

  ReplyDelete
 2. ///குழந்தைகள் தின சிறப்பு பதிவா...
  இன்ட்லியில் இணைக்கவில்லை போல.//// நன்றி
  இன்லியில் இணைத்துவிட்டேனே ..

  ReplyDelete