கமலஹாசனுக்கு அகவை 56 ..

 
கமல்ஹாசன்  1954. 11.7 அன்று இந்தியாவிலே பரமக்குடி என்னும் ஒரு இடத்தில் பிறந்து இன்று இந்தியாவின் இலட்சகணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், கதாசிரியர், பாடகர்...இப்படி பல்வேறு துறைகளிலும் கலக்கிய, கலக்கிக்கொண்டு இருக்கும் சகலகலாவல்லவன்.1959-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்த கமல்ஹாசன் இன்று தனது தனது 56 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

    முதல் படத்தில் நடித்த போது கமல்ஹாசனுக்கு வயது 5. ஜெமினி கணேசன் – சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்த கமலுக்கு, முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து சிறந்த கலைஞராக தன்னை நிலைநிறுத்திய கமல், ஹிந்தி மற்றும் வங்காளப் படங்களிலும் முத்திரைப் பதித்தவர்.சினிமாவில் ஏற்று இராத பாத்திரங்கள் இல்லை . அவர்  ஏற்காத  வேடங்கள் இல்லை . சினிமாவில் தெரியாத அம்சங்கள் இல்லை . படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பு , வித்தயாசமான வேடங்கள் என்று தனது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடிப்பார.அத்தோடு எத்தனையோ  படங்களில் தன் நகைச்சுவை நடிப்பின் மூலமும் பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.உதாரணமாக அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம்..இப்படி பல படங்களை சொல்லலாம்.

   இவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்த படங்கள் என்றால் அவ்வை சண்முகி, தெனாலி, குணா ,மூன்றாம் பிறை, தேவர் மகன்  போன்ற படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவர் மூன்று முறை இந்திய அரசின் நடிப்புக்கான விருதை பெற்றுள்ளார் (மூன்றாம் பிறை நாயகன் இந்தியன்) அத்தோடு பதினெட்டு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
2005 இல் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 
  தமிழுக்கு ஏராளமான படைப்புக்களை தந்த இந்த சகலகலா வல்லவனுக்கு எம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்.
Click to get cool Animations for your MySpace profile
MySpace Layouts!

0 கருத்து:

Post a Comment