சாய்பாபா மீண்டும் அவதரிப்பார் !

இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது  மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன்  அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின்  நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே.

நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்  நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.நான் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலே எனக்கு கற்ப்பித்த ஆசிரியர்கள் சிலர் பாபாவின் பக்தர்களாக இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பாபாவின் அருமை பெருமைகள் அற்புதங்கள் என்று பல கதைகள் எமக்கும் சொல்வார்கள். அவற்றை எல்லாம் நம்பி நானும் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்பியிருந்தேன் என்பதை விட நம்பவைக்கப்பட்டேன் என்று சொல்வதே சரியானது.  அநேகரின் நிலைமையும் இவ்வாறுதான் ( நம்ப வைக்கப்பட்டார்கள்)  என் வீட்டு சாமி அறையையும்  சாய்பாபா அலங்கரித்தார். ஏன்  என் பாக்கற்றில் இருக்கும் பர்சிலும் சாய் பாபா குடிகொண்டிருந்தார். பள்ளி பருவத்திலே புத்தக பூச்சிகளாகவே அதிக தருணங்கள் இருந்ததால பாபாவுடைய   நியாய தன்மைகளை பற்றி சிந்திக்க தோன்றவில்லை. ஆனால் வெளி உலகுக்கு வந்த போது தான் அவ்வப்போது அறியும் செய்திகளால் எனக்குள்ளும் சில சந்தேகம் வந்தது.

1. கருணாநிதி சச்சின் டென்டுல்லகர் போன்ற முக்கிய தலைகள் புட்பபதிக்கு சென்றால் சென்ற அடுத்த நிமிடமே பாபாவை அருகில் சென்று சந்தித்து போஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் கடைக்கோடி பக்தன் சென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும், ஏன் அவரின் தரிசனம் கிடைக்காமலே திரும்பியவர்களும் உள்ளார்கள்.  இது என்ன நியாயம். ஆக கடவுளை சந்திக்க பணபலமும் அதிகார பலமும் செல்வாக்கு செலுத்துகிறது என்று கொள்ளலாமா?

2 . இவர் வீபூதி கொடுக்கும் போது பார்த்தீர்கள் என்றால், அனைவருக்கும் கொடுப்பதில்லை. சூழ்ந்திருக்கும் கூட்டத்திலே சில பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுப்பார். "அதிஷ்டலாப  சீட்டு போல". இது என்ன நியாயம்? இங்கே வீபூதி கிடைக்காதவனது மனநிலை எவ்வாறு இருக்கும்.  "நான் எதோ குற்றம் செய்துவிட்டேன். அது தான் என்னை சாமி கண்டு கொள்வதில்லை" என்று தினமும் அவன் மனசாட்சி அவனை குழப்பாதா. (அப்புறம் தான் தெரிஞ்சுது சாமி எதற்கு விபூதியை சிக்கனமா கொடுக்கிறார் என்று)

3. அதோடு இவர் வீபூதி குங்குமம் லிங்கம் ஆகியவற்றை மட்டும் தான கொடுப்பார்.  இதை விட மனிதனுக்கு முக்கியமான தேவைகள் இல்லையா? ஏன் மும்பையிலே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன் தன் சக்தியால் அதை  தடுத்து நிறுத்த  முடியவில்லை?   இயற்க்கை அழிவுகளை தவிர்க்க முடியாது தான் ஆனால் அது பற்றி  முற்கூட்டிய எச்சரிக்கை விடலாமே சுவாமியார்!  இலங்கையில்  நடந்த யுத்தத்தை கூட தடுத்து நிறுத்த முடியவில்லை, ஏன் இலங்கையிலே இவருக்கு  பக்தர்கள் இல்லையா? ஈழத்திலே நான் கண்ட வரை பாபாவுக்கு அதிகளவான பக்தர்கள் உள்ளார்கள். பாபாவை பார்ப்பதற்கென்றே இந்தியாவுக்கு படை எடுத்தவர்களையும்  கண்டுள்ளேன்.சரி இவையெல்லாம் கால நியதி என்றால் மனித ரூபத்திலே கடவுள் எதற்கு? வீபூதி  கொடுப்பதற்கும் லிங்கம் எடுப்பதற்குமா?

சிலர் சொல்கிறார்கள், அவர் சாமியார் என்பதற்கு மேலாக மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம். ஆனால் இது எனக்கு நியாயமான கருத்தாக தெரியவில்லை. உதவிகள் முறையான வழிகளில் செய்தாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அதன் "மூலம்"!  தன் வீட்டு சொத்திலா செய்தார். அப்பாவி மக்களை ஆன்மீக வாதி என்ற போர்வைலே ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெற்ற பணத்திலே அரசியல்வாதிகளை சரிப்படுத்தி  சிறு பகுதியை மக்களுக்காக செலவழித்தார்.  இவர் கடவுளாக இருந்தால்.... தான் எப்போது இறப்பேன் என்று அறிந்திருப்பார். அவ்வாறு அறிந்து  அதற்க்கு முன்னரே தன்னிடம் உள்ள சொத்துக்களை மக்களுக்காக வழங்கியிருக்க வேண்டாமா?  இப்பொழுது பாருங்கள் இவர் பேரிலே தெக்கு நிற்கும் கோடிகணக்கான சொத்துக்காக வெட்டுக்குத்து, கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!

பாபா சொல்லிருக்கார், நான்  மீண்டும் அவதரிப்பேன், அவதரித்து  36 வயசு வரை இந்த பூமியிலே வாழ்வேன் என்று! இது உண்மையா? ஆமாம், இது உண்மை தான்........... காவி உடுத்தவனை கடவுளாக பார்க்கும் மக்கள் உள்ளவரை யுகங்கள் தோறும் பாபாக்கள் அவதரிப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை!தனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் பாபாவும்  விஞ்ஞானத்தை தானே  நாடினார். இதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை  விட  விஞ்ஞானம்  தான் உயர்ந்தது என்று "கடவுள் பாபா" நிரூபித்துவிட்டதாக கூட வாதிடலாம்.  இந்த உலகிலே பிறந்த உயிரினங்கள் யாவும் ஒரு நாள் இறக்க தான் செய்யும்.  விஞ்ஞானத்தாலே  இறப்பை தள்ளிப்போடலாமே ஒழிய  ஒரு போதும் தவிர்க்க முடியாது. 

மீண்டும் சொல்கிறேன் மனிதன் கடவுளாக முடியாது. கடவுளும் மனித ரூபத்தில் வந்து நான் தான் அவதார புருஷன் என்று தன்னை விளம்பரப்படுத்த மாட்டார். அவ்வாறு வந்து எவனாவது சொன்னால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே தான் அனுமதிக்க வேண்டும். நான் பாபாவின் இறப்பை நினைத்து சந்தோஷபடவில்லை. அப்படி சந்தோஷ படுவதற்கும் ஏதுமில்லை. பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

21 comments:

 1. ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  No comments.///வாங்க ,என்ன ஆச்சு.........

  ReplyDelete
 2. கருத்துக்கள் கன கச்சிதம் வாதம் பிரம்மாதம் பாஸ்!!
  உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!!

  ReplyDelete
 3. இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன் அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின் நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே. //

  அஃதே..........அஃதே....
  நம்புறன் சாமி, நீங்க நல்லவன் என்று.

  ReplyDelete
 4. நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.//

  நிஜமாவா சகோ...ஹி...ஹி...

  ReplyDelete
 5. 1. கருணாநிதி சச்சின் டென்டுல்லகர் போன்ற முக்கிய தலைகள் புட்பபதிக்கு சென்றால் சென்ற அடுத்த நிமிடமே பாபாவை அருகில் சென்று சந்தித்து போஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் கடைக்கோடி பக்தன் சென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும், ஏன் அவரின் தரிசனம் கிடைக்காமலே திரும்பியவர்களும் உள்ளார்கள். இது என்ன நியாயம். ஆக கடவுளை சந்திக்க பணபலமும் அதிகார பலமும் செல்வாக்கு செலுத்துகிறது என்று கொள்ளலாமா?//

  இந்தக் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன் சகோ, பண பலம் தான் இன்று ஆன்மீகத்தை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது.

  இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி இது தான் உண்மை நிலை.

  ReplyDelete
 6. பாபாவை பார்ப்பதற்கென்றே இந்தியாவுக்கு படை எடுத்தவர்களையும் கண்டுள்ளேன்.//

  ஆமா.....ஆமா....

  இது போல இந்தியாவின் சபரி மலைக்கும் பல்ர் ஜாத்திரை செய்வார்கள்.

  ReplyDelete
 7. பாபா சொல்லிருக்கார், நான் மீண்டும் அவதரிப்பேன், அவதரித்து 36 வயசு வரை இந்த பூமியிலே வாழ்வேன் என்று! இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான்........... காவி உடுத்தவனை கடவுளாக பார்க்கும் மக்கள் உள்ளவரை யுகங்கள் தோறும் பாபாக்கள் அவதரிப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை!//

  நச்சென்று ஒரு அடி..
  எங்கள் சமூகத்தில் உள்ள பண்பாட்டு விழுமியங்களும், மூட நம்பிக்கைகளும் அழிவடையாமல் இருக்கும் வரை, இவர்கள் அல்ல இன்னும் பலர் தோன்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.

  ஏமாற்றுவோர் இருக்கும் வரை, ஏமாளிகள்....

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. @மைந்தன் சிவா said...
  @நிரூபன்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி ...

  ReplyDelete
 10. ///M.S.E.R.K. said...

  நூற்றுக்கு நூறு உண்மை!/// நன்றி பாஸ்

  ReplyDelete
 11. @நிரூபன்
  ///ஏமாற்றுவோர் இருக்கும் வரை, ஏமாளிகள்..../// உண்மை தான் ,பிழை எம்முடையது தானே

  ReplyDelete
 12. mgr paaddu thaan ninaivukku varuthu

  ReplyDelete
 13. பக்குவமான கட்டுரை நண்பா

  ReplyDelete
 14. அருமையான கட்டுரை.

  யராவது எதாவது செய்து நமது சிரமத்தை போக்கமட்டார்களா என என்னும்,
  போரட்டத்தை சந்திக்க தயங்கும் மக்கள் உள்ளவரை, சத்திய சாய்பாபா, சிரடி சாய்பாபா, பிரேமனந்த,
  நித்தியானந்த உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

  எனினும் சில விலை உயயர்ந்த இதய மூளை சம்பந்த பட்ட சிகிச்சைகளை பரிவோடும் முழுவது இலவசமாக வழங்கும்
  அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபா அவர்களுக்கு நன்றியும் சொல்லத்தான் வேண்டும்.... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்

  ReplyDelete
 15. ///முனைவர்.இரா.குணசீலன் said...

  பக்குவமான கட்டுரை நண்பா/// நன்றி நண்பரே

  ReplyDelete
 16. ////தமிழ்மணி said...

  அருமையான கட்டுரை.

  யராவது எதாவது செய்து நமது சிரமத்தை போக்கமட்டார்களா என என்னும்,
  போரட்டத்தை சந்திக்க தயங்கும் மக்கள் உள்ளவரை, சத்திய சாய்பாபா, சிரடி சாய்பாபா, பிரேமனந்த,
  நித்தியானந்த உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

  எனினும் சில விலை உயயர்ந்த இதய மூளை சம்பந்த பட்ட சிகிச்சைகளை பரிவோடும் முழுவது இலவசமாக வழங்கும்
  அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபா அவர்களுக்கு நன்றியும் சொல்லத்தான் வேண்டும்.... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்//// நன்றி உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 17. //mgr paaddu thaan ninaivukku varuthu
  //

  ரிப்பீட்டு

  ReplyDelete
 18. நல்ல பதிவு. உடன்படுகின்றேன்.

  ReplyDelete