இரண்டு பெண்கள்!


கருங்கூந்தல் முடி விரித்து
அதில் நறுமண  மலர்கள்  சூடி
கண்ணுக்கு மை போட்டு
காலில் இரு கொலுசு மாட்டி
நெற்றி மஞ்சள் திலகம் இட்டு
நிமிர்ந்த நின் பார்வையோடு
அன்ன நடை நீ  வாங்கி
வீதியோரம் நடந்து வந்தால்
விபத்துக்கள் அதிகமடி
பெண்ணே..!
கருங்கூந்தல் முடி வளர்த்து
அதில் வர்ண  கலரிங் பூசி
காதில் இரு வளையம் மாட்டி
கழுத்திலே நாலு செயின் பூட்டி
வாய் உதட்டு சாயம் போட்டு
வாசனை திரவியங்கள் சகிதம்
மின்னல் நடை கொண்டு
வீதியிலே நீ  நடந்தால்
விசில் சத்தம் ஏராளம்
பெண்ணே.

6 comments:

 1. அண்ணே .... கவிதை ...

  கலக்கரீங்க...

  ReplyDelete
 2. ரெட்டைக் கவிதையில் ஒற்றைப் பதிவு தந்து முத்தாய் பதித்தவிட்டீர்களே அருமை....

  ReplyDelete
 3. ////வேடந்தாங்கல் - கருன் @
  ம.தி.சுதா@//// வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி..

  ReplyDelete
 4. முத்தான கவிதைகள் இரண்டுமே. தத்துவக் கவிதை என்பது இதனைத் தானோ? இன்றைய நம் நாட்டு நங்கையரைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது உங்களின் கவிதை. இன்னும் நிறையக் கவிதைகளை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 5. நன்றி நிரூபன்.

  ReplyDelete
 6. நண்பா உங்களின் வலைத்தளத்தில் படித்த போது மிகவும் பிடித்துப்போன கவிதை
  மற்றவர்களோடு பகிரலாம் என பகிர்ந்து கொண்டேன் ;
  அத்துடன் இணைய வலைத்தளத்தில் ரசித்தது என குறிப்பிட்டு உங்கள் தளமுகவரியினையும் இட்டுள்ளேன்.

  ReplyDelete