ஆடு புலி ஆட்டம்..!!!

புற்றீசல் போல தினமும் புதுப்புது படங்கள் வந்துகொண்டு தான் இருக்கு. இதில சராசரியா ஒரு படத்துக்கு 4 /5 பாடல்கள் வரை இருக்கும். ஆனால் இந்த  பாடல்களில்  எத்தனை பாடல்கள் அர்த்தம் உள்ள வரிகளையோ, இல்லை இந்த சமூகத்தை படம் பிடித்து காட்டுவதாகவோ இருக்கும்  என்பது கேள்விக்குறியே! இப்ப எல்லாம் பாடல்களிலே பாடல் வரிகளை விட இசைக்கே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கிறார்கள்.

சமீபத்தில ஒரு பாடலை  எதேச்சையாக கேட்டன். "ஆடு புலி ஆடம் தான் அரசியலாச்சு" என்று தொடங்கும் இந்த பாடல்  சம  காலத்தில ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பொருந்தும் வரிகளாய் இருக்கு. ஒட்டுமொத்த தமிழ் அரசியல் வா(வியா)திகளையும்  பிழிந்து எடுத்துள்ளது இந்த வரிகள். ஆனாலும் ஒரு அதிசயம், இந்த பாடலுக்கு "தடா" போடவில்லை. தினா இசையிலே   பவானி படத்தில இருந்து அந்த பாடல்..ஆடு புலி ஆட்டம் தான் அரசியலாச்சு இங்கே
ஆளை வெட்டும் காரியம் தான் தினசரி காட்சி!
கேடு கெட்ட கூட்டத்தால வாடுது ஊரு-இதை
கேள்வி கேக்க யாரும் இல்ல பாருங்க சாரு!

குள்ளநரி கூட்டத்தோட கொட்டம் அடங்குமா!
நம்ம புள்ள குட்டி கண்ணீரோட செத்து மடியுமா!

மூணு வேளை சோத்துக்காக ஓடி உழைக்குறோம்
நாம முப்பது நாளும் வேர்வையில வாடி கிடக்கிறோம்!
ஓடி ஆடி வேலை செஞ்சும் வாழ்க்கை மாறல
நாம ஊமையாட்டம் வாழ்வதால சோகம் போகல!
வீதியெல்லாம் கோவில் கட்டி என்ன புண்ணியம்
நம்ம வேதனையும் தீரலையே பூசை பண்ணியும்!

நல்லவங்க வாழ்ந்த பூமி ஆனது தீட்டு
இத நீயும் நானும் புரிஞ்சுக்கிட்டா கிடைச்சுடும் ரூட்டு!

ஓட்டுப்போட மட்டும் தானே நாம இருக்கிறம்
இந்த ஊசலாடும் வாழ்க்கையில எங்க சிரிக்கிறம்!
காலமெல்லாம் மாறும் என்னு கதயளந்தாங்க
நாம கவலையிலே சாகும் போது தலைவிதின்னாங்க! 
காசுக்காக கூட்டணியும் மாறுது ஜோரா
ஈன பதவிக்காக ஈழ ரத்தம் ஓடுது ஆறா!

ராத்திரியில் விடுதலையை வாங்கியதேனோ
இன்னும் விடியலேன்னு அழுது அழுது தேம்பிடத்தனோ!

4 comments:

 1. நல்ல ரசனை உங்களுக்கு...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
  இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

  ReplyDelete
 2. ஆனால் இந்த பாடல்களில் எத்தனை பாடல்கள் அர்த்தம் உள்ள வரிகளையோ, இல்லை இந்த சமூகத்தை படம் பிடித்து காட்டுவதாகவோ இருக்கும் என்பது கேள்விக்குறியே! இப்ப எல்லாம் பாடல்களிலே பாடல் வரிகளை விட இசைக்கே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கிறார்கள்.//

  வணக்கம் கந்தசாமியார், சகோதரம் நலமா?
  இதுவரை நாளும் உங்கடை புளொக்கிற்கு வந்து போட்டு, கிறிக்கற் பதிவைப் படித்து விட்டு கருத்துச் சொல்லாமலே போயிட்டன். வன்னி யுத்த முகாம் வாழ்விற்குப் பிறகு கிறிக்கற் மீதிருந்த நாட்டம் குறைந்தது தான் காரணம். இன்று ஒரு நல்ல பதிவை இட்டிருக்கிறீர்கள். தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. ஆனால் இந்த பாடல்களில் எத்தனை பாடல்கள் அர்த்தம் உள்ள வரிகளையோ, இல்லை இந்த சமூகத்தை படம் பிடித்து காட்டுவதாகவோ இருக்கும் என்பது கேள்விக்குறியே! இப்ப எல்லாம் பாடல்களிலே பாடல் வரிகளை விட இசைக்கே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கிறார்கள்.//

  ஆய் இப்பத் தான் இந்த உண்மை விளங்கிச்சோ, இப்பவெல்லாம் பின் நவீனத்தோடை பாட்டு வருதப்பா. அதுவும் கடின மொழி நடையிலை பாட்டு வருது, மொழி பெயர்த்து, பொருள் கண்டறிந்து விளக்க உரை எழுத உரையாசிரியர்களைத் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையிலை சினிமா இருக்கு,

  இந்தப் பாட்டிற்கு விளக்கம் சொல்லுங்கோ பார்ப்பம் சகோ?
  ஓமக சீயா ஓமக சியா.......நாக்கு முக்க நாக்கா

  http://www.youtube.com/watch?v=9yDh_nFk3_w&feature=related

  ReplyDelete
 4. காசுக்காக கூட்டணியும் மாறுது ஜோரா
  ஈன பதவிக்காக ஈழ ரத்தம் ஓடுது ஆறா!//

  சகோ, இந்தப் பாட்டு உரியவர்களைப் போய் சேர்ந்தால், அவர்கள் உச்சந் தலையில் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்படியான நல்ல பாடல்களை யாரய்யா வானொலியிலை போடுறாங்க? டாடி மம்மி வீட்டில் இல்லை பாட்டுப் போல கருத்தாளம் மிக்க பாடல்களையெல்லே போடுறாங்கள்.

  ReplyDelete