அன்பு "கொல்லும்" ஆபத்து..!
விநாடிகள் தோறும்
எம் விழிகளை கடக்கும்
விசித்திரமான மனிதர்களில் 
ஒருசிலர் மட்டுமே
விழிகளூடு  கலந்துவிடுகிறார்கள்,
அன்பு என்ற அம்பை ஏவியோ  
பாசம் என்ற வலை வீசியோ
எம்மை கவர்ந்து கொள்கிறார்கள்!

இதே பாணியில் தான்
சில கயவர்களும்
கவர்ந்து கொள்ளும் காந்தத்தில்
ஒட்ட வரும் கறள் பிடித்த ஆணியாக...!

சில தருணங்களிலே 
எமக்கு தெரிவதில்லை
அன்பு என்ற அம்பின் முனையில் 
பூசப்பட்டிருக்கும் கொடிய விஷம், 
எமக்கு புரிவதில்லை
பாசம் என்ற வலைக்கு பின்னால்
பலமாக போடப்பட்டுள்ள வேஷம்!


வாய் நுனியில் தேன் தடவி
வார்த்தைகளுக்கு வெள்ளையடித்து
புரட்டு கதைகள் பேசி
வித்தைகள் பல காட்டி
வாய்ப்பு வரும் போது
விசத்தை வீரியமாக கக்க
காத்திருக்கும் நச்சு பாம்புகள்..! 

கொடுக்கை விரித்து
வாயை பிளந்து
வா என்று நெருங்கி வரும்  
விசத் தேளை கண்டு,
அது வருவது அரவணைக்க தான் என  
அதனிடம் அன்பை எதிர்பார்க்கும் 
சில அப்பாவி பிராணிகள்....!
 
இவ்வாறு
பாதிக்கபடுவது
பலம் குன்றிய பிராணி தான் என்பதை
எதிரில் நின்று பார்த்துக்கொண்டு
உண்மை தெரிந்தும்  
உரக்க அதை கூறாது  
ஊமையாக நான்...,
என்றும் சுயநலவாதி தான்!

23 comments:

 1. //உண்மை தெரிந்தும்
  உரக்க அதை கூறாது
  ஊமையாக நான்..., //

  அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. உண்மை தெரிந்தும்
  உரக்க அதை கூறாது
  ஊமையாக நான்...,
  என்றும் சுயநலவாதி தான்//
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. நாட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள்தான்...

  யதார்த்தமான கவிதை....
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. வாய் நுனியில் தேன் தடவி
  வார்த்தைகளுக்கு வெள்ளையடித்து
  புரட்டு கதைகள் பேசி
  வித்தைகள் பல காட்டி
  வாய்ப்பு வரும் போது
  விசத்தை வீரியமாக கக்க
  காத்திருக்கும் நச்சு பாம்புகள்..!
  உண்மையிலே
  அன்பு "கொல்லும்" ஆபத்து..!

  நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 5. //உண்மை தெரிந்தும்
  உரக்க அதை கூறாது
  ஊமையாக நான்..., //

  அருமை. பாராட்டுக்கள்./// நன்றி ஐயா

  ReplyDelete
 6. ///இராஜராஜேஸ்வரி said...

  உண்மை தெரிந்தும்
  உரக்க அதை கூறாது
  ஊமையாக நான்...,
  என்றும் சுயநலவாதி தான்//
  பாராட்டுக்கள்./// ரொம்ப நன்றி கருத்துக்கு

  ReplyDelete
 7. ////பாட்டு ரசிகன் said...

  நாட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள்தான்...

  யதார்த்தமான கவிதை....
  வாழ்த்துக்கள்..//// வாங்க பாஸ் சுயநலவாதிகள் இருப்பது உண்மை தான் ...

  ReplyDelete
 8. ////ரேவா said...

  வாய் நுனியில் தேன் தடவி
  வார்த்தைகளுக்கு வெள்ளையடித்து
  புரட்டு கதைகள் பேசி
  வித்தைகள் பல காட்டி
  வாய்ப்பு வரும் போது
  விசத்தை வீரியமாக கக்க
  காத்திருக்கும் நச்சு பாம்புகள்..!
  உண்மையிலே
  அன்பு "கொல்லும்" ஆபத்து..!

  நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பரே.../// நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 9. அன்பு கொள்வது குறித்து வரும்
  ஆயிரம் கற்பனைக் கவிதைகளுக்கடையில்
  கொல்லும் அன்பு குறித்த இந்த கவிதை
  மிக யதார்த்தம்
  நல்ல கவிதையைப் படித்த நிறைவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அம்மாடி...அசத்திட்டீங்க போங்க பாஸ்..
  இம்புட்டு நீளமா நான் எதிர்பாக்கேல..நல்லா இருக்கு

  ReplyDelete
 11. ///Ramani said...

  அன்பு கொள்வது குறித்து வரும்
  ஆயிரம் கற்பனைக் கவிதைகளுக்கடையில்
  கொல்லும் அன்பு குறித்த இந்த கவிதை
  மிக யதார்த்தம்
  நல்ல கவிதையைப் படித்த நிறைவு
  தொடர வாழ்த்துக்கள்/// நன்றி ஐயா

  ReplyDelete
 12. மைந்தன் சிவா said...

  அம்மாடி...அசத்திட்டீங்க போங்க பாஸ்..
  இம்புட்டு நீளமா நான் எதிர்பாக்கேல..நல்லா இருக்கு///நன்றி மைந்தன் சிவா

  ReplyDelete
 13. அருமை, அழகு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. யோவ் நெசமாலுமே நல்ல இருக்குயா...இப்படி புலம்புகின்றவனுக்கு ஊரு வெச்ச பேரு தான் கையாலாகவதன்...கையால் ஆகலைனா என்ன காலால் ஆக்கிடலாம் என்று துடைச்சு தூக்கி எறிஞ்சுட்டு பொழப்பை ஓட்டும் இன்னொரு கையாலாகவதன்

  ReplyDelete
 15. பாட்டு ரசிகனின் கருத்தையே வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 16. ///FOOD said...

  அருமை, அழகு. பாராட்டுக்கள்./// நன்றி பாஸ்

  ReplyDelete
 17. ////டக்கால்டி said...

  யோவ் நெசமாலுமே நல்ல இருக்குயா...இப்படி புலம்புகின்றவனுக்கு ஊரு வெச்ச பேரு தான் கையாலாகவதன்...கையால் ஆகலைனா என்ன காலால் ஆக்கிடலாம் என்று துடைச்சு தூக்கி எறிஞ்சுட்டு பொழப்பை ஓட்டும் இன்னொரு கையாலாகவதன்/// வாங்க பாஸ் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 18. ///Philosophy Prabhakaran said...

  பாட்டு ரசிகனின் கருத்தையே வழிமொழிகிறேன்.../// நன்றி பிரபா

  ReplyDelete
 19. ///யாதவன் said...

  ஆழமான கவிதை/// நன்றி யாதவன்

  ReplyDelete
 20. சில தருணங்களிலே
  எமக்கு தெரிவதில்லை
  அன்பு என்ற அம்பின் முனையில்
  பூசப்பட்டிருக்கும் கொடிய விஷம்,
  எமக்கு புரிவதில்லை
  பாசம் என்ற வலைக்கு பின்னால்
  பலமாக போடப்பட்டுள்ள வேஷம்!
  அருமையான் கவிவரிகள் நிகழ்கல நினைவுகளை கண்முன்னே கொண்டுவரும் வரிகள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 21. நிதர்சணம் பாஸ்,
  உங்க எழுத்துக்கள் ரெம்ப ரசனைய இருக்கு,
  இப்போ டைம் இல்ல ஆறுதலா இருந்து எல்லாம் படிக்கணும்..

  ReplyDelete
 22. கவிதையில், மறைந்திருக்கு குழி பறிக்க நினைக்கும், கயவர்களைப் பற்றியும்,
  சுயநலவாதிகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்.

  குறியீட்டு வடிவம்- உங்கள் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. பலருக்கு இக் கவிதை ஒரு சாட்டையடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete