சேவாக்/ ஒசாமா/ யார் பயங்கரவாதி?


சேவாக் என்ற சிங்கம் சற்று நேரம் களத்திலே நின்றால் எதிரணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை நேற்றைய போட்டியிலே கிரிக்கெட் ரசிகர்கள்  புரிந்துகொண்டிருப்பார்கள்.  தனி ஒரு மனிதனாக நின்று இலக்கின் மூன்றில் இரண்டு பகுதியை அரைவாசி ஓவர்களிலே விளாசி தள்ளி தோல்வியின் விளிம்பில் நின்ற அணியை வெற்றிக்கு அழைத்து  சென்றார். ஒவ்வொரு அடியும் இடியாக இறங்கியது,  சங்காவின் முகத்தில் ஈயாடவில்லை, போதா குறைக்கு  சேவாக்கின் அருமையான இரண்டு பிடிகளை கோட்டை விட்டார் டெக்கான் வீரர் ஒருவர்.

இசாந் மற்றும் ஸ்ரெயினின் ஓவர்கள் தவிர்ந்த  மற்றைய பந்துவீச்சாளர்களை ஈவிரக்கம் பார்க்காது நொறுக்கி தள்ளினார். அவர் அடித்தது பெரிய விடயம் அல்ல அடிக்கப்பட்ட நேரம் தான் ...! ஆரம்பம் முதலே 179 என்ற மிக பெரிய இலக்கை துரத்தும் போது அடுத்தடுத்து மந்தமான ஓட்ட எண்ணிக்கையில் விழுந்த மூன்று விக்கெட்டுகள். அநேகமானோர் நினைத்திருப்பார்கள் டெல்லி இம்முறையும் தோல்வி தான் என்று, ஆனால் அந்த நேரத்தில் சேவாக் எடுத்த விஸ்வரூபம் தான், அணியின் வெற்றியை இலகுவாக உறுதிபடுத்தும் வரை நிறுத்தவில்லை.  என்னை பொறுத்தவரை இது வரை நடந்த ipl போட்டிகளிலே நேற்று இடம்பெற்ற டெக்கான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி தான் ரசிகர்களுக்கு மிக பெரும் விருந்தாக  இருந்திருக்கும்  என்று சொல்வேன்.இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிகான வாய்ப்பை  டெக்கான் இழந்துவிட்டது. டெல்லி அடுத்த சுற்றுக்கு நுழையவேண்டும் என்றால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் முடியும். ஏற்கனவே மும்பை இந்தியன், கொல்கத்தா, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. எனினும் பங்களூர் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்காம் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆக அரையிறுதிக்கு செல்லும் அணிகள் உறுதியாக இன்னும் சில நாட்கள் செல்ல வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------

இன்று உலகம் பூராகவும் பேசுகிற விடயமாக பின்லேடனின் மரணம் அமைந்துவிட்டது. ஐரோப்பிய ஊடகங்கள் அனைத்திலும் இது பற்றிய செய்திகள் தான். அமெரிக்கர்கள் ஒரு படி மேல் சென்று வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.ஆனால் இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது. அமெரிக்கா ஒரு காலத்தில் வளர்த்த கிடா தான் பின்லேடன் கும்பல், தாம் வளர்க்கப்படுவது வேள்விக்கு தான் என்று தெரிந்ததும் வளர்த்த கிடா அமெரிக்காவின் மார்பில் பாய வெளிக்கிட்டது. அதன் பின் மாறி மாறி அடிபட்டு கொண்டார்கள். இறுதியில் பின்லேடன் - அமெரிக்கா  யுத்தத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய ஓநாய் இருக்கும் வரை , வளைகுடா  நாடுகளிலே  புகுந்து நரி தனம் பண்ணும் வரை பின்லேடன்கள் பிறந்து  கொண்டே இருப்பார்கள். ஒசாமா பயங்கரவாதி தான் அதே போல ஜனநாயகம் என்ற தோல் போர்த்தி வலம் வரும் பயங்கரவாதி தான் அமெரிக்கா.  இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான்.

                         மெரிக்காவை அழிக்க
                         ஒசாமா பலியெடுத்த உயிர்கள்
                         மூன்று ஆயிரம்,
                         சாமாவை அழிக்க
                         அமெரிக்கா கென்ற அப்பாவி மக்கள்
                        ஆறு ஆயிரம் - இப்ப சொல்லுங்க
                         யார் பயங்கரவாதி ...?


30 comments:

 1. பின்லேடன் செய்தது தீவிரவாதம்..
  அமெரிக்கா செய்வது உலகமகா தீவிரவாதம்...

  தலைப்பு சரியா வச்சி அசத்திறீங்க பாஸ்..

  ReplyDelete
 2. டைட்டில் கலக்கல்.. பதிவு அசத்தல்

  ReplyDelete
 3. // இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான். // கரெக்டாச் சொல்லுங்க!

  ReplyDelete
 4. // இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான் //

  ஆம். எங்கு எது நடந்தாலும் அது தான் மிகப்பெரிய கொடுமையாக உள்ளது.

  ReplyDelete
 5. இந்த தலைப்பு அருமை தலைவரே...
  பதிவும் அருமை..

  ReplyDelete
 6. நேற்று செவாக் ஆட்டம் என்னை ரொம்பவே கவர்ந்ததுங்க என்ன ஒரு தாண்டவம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

  ReplyDelete
 7. //அமெரிக்காவை அழிக்க
  ஒசாமா பலியெடுத்த உயிர்கள்
  மூன்று ஆயிரம்,
  ஒசாமாவை அழிக்க
  அமெரிக்கா கென்ற அப்பாவி மக்கள்
  ஆறு ஆயிரம் - இப்ப சொல்லுங்க
  யார் பயங்கரவாதி ...?////

  என்னை பொருத்தவரை ரெண்டு பேருமே ஒன்னுதான்....

  ReplyDelete
 8. கிரிக்கெட் எனக்கு தெரியாது, ஆனால் அடுத்து வரும் விஷயம் சாட்டையடிகள்....

  ReplyDelete
 9. தமிழ்மணம் என்னாச்சுய்யா....???

  ReplyDelete
 10. Super...

  Kanthasamy you are writing well..Plz continue

  ReplyDelete
 11. பின்லாடன் செத்தால் துவக்கு குண்டு எல்லாம் வெடிக்காம போயிடுமோ இல்லைதானே

  ReplyDelete
 12. ///# கவிதை வீதி # சௌந்தர் said...

  பின்லேடன் செய்தது தீவிரவாதம்..
  அமெரிக்கா செய்வது உலகமகா தீவிரவாதம்...
  /// உண்மை தான் பாஸ் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 13. //சி.பி.செந்தில்குமார் said...

  டைட்டில் கலக்கல்.. பதிவு அசத்தல்// நன்றி பாஸ்

  ReplyDelete
 14. ///செங்கோவி said...

  // இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான். // கரெக்டாச் சொல்லுங்க!/// வாங்க வாங்க ,,,,

  ReplyDelete
 15. ////வை.கோபாலகிருஷ்ணன் said...

  // இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான் //

  ஆம். எங்கு எது நடந்தாலும் அது தான் மிகப்பெரிய கொடுமையாக உள்ளது.///நன்றி ஐயா

  ReplyDelete
 16. * வேடந்தாங்கல் - கருன் *! said...

  இந்த தலைப்பு அருமை தலைவரே...
  பதிவும் அருமை../// நன்றி கருண்

  ReplyDelete
 17. ///MANO நாஞ்சில் மனோ said...

  தமிழ்மணம் என்னாச்சுய்யா....???// தமிழ் மனத்தொட கோவம் ...) நன்றி மனோபாஸ்

  ReplyDelete
 18. ///டக்கால்டி said...

  Super...

  Kanthasamy you are writing well..Plz continue /// என்ன வச்சு காமெடி பண்ணலையே ..)) நன்றி தலிவா

  ReplyDelete
 19. ////யாதவன் said...

  பின்லாடன் செத்தால் துவக்கு குண்டு எல்லாம் வெடிக்காம போயிடுமோ இல்லைதானே// உண்மை தான் கருத்துக்கு நன்றி யாதவன்

  ReplyDelete
 20. நச் பதிவு நண்பா.........
  எப்படிப்பார்த்தாலும் வளர்ப்பவனே பெரிய பயங்கரவாதி என்பது என் தாழ்மையான கருத்து!

  ReplyDelete
 21. அமெரிக்கா 6000 பேரை கொன்றதா??????

  சேவாக்கின் தாண்டவம் சிறப்பு.......

  ReplyDelete
 22. ///விக்கி உலகம் said...

  நச் பதிவு நண்பா.........
  எப்படிப்பார்த்தாலும் வளர்ப்பவனே பெரிய பயங்கரவாதி என்பது என் தாழ்மையான கருத்து!/// ஆம் உண்மை தான் உங்க கருத்துக்கு நன்றி...

  ReplyDelete
 23. akulan said...

  அமெரிக்கா 6000 பேரை கொன்றதா??????

  சேவாக்கின் தாண்டவம் சிறப்பு.......//// ஆம் ஒசாமாவை கொல்வதற்காய் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் நடத்திய தாக்குதல்களில் இது வரை கொல்லப்பட்ட மக்கள் குறைந்தளவு ஆறு ஆயிரம்...நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 24. அன்புடன் மலிக்கா said...

  பதிவு அருமை../// நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 25. தங்கள் மீது சாந்தி நிலவட்டும் சகோ.கந்தசாமி.

  சேவாக்கின் அநாயாசமான அதிரடி ஆட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  அப்புறம், பதிவின் கடைசி வரிகளில்
  நீங்கள் சேவாக்கையே மிஞ்சி விட்டீர்கள். அப்படி ஒரு அதிரடி ஆட்டம்..!

  இவ்வுலகில் அமெரிக்கா செய்த மொத்த கொலைகளையும் கூட்டினால்...

  இன்னொரு கிரகத்தையே கூட ஹவுஸ் ஃபுல் ஆக்கிவிடலாம் சகோ..!

  அவன் இப்பிரபஞ்சத்திற்கே பயங்கரவாதி..!

  அசத்தலான பதிவு.

  ReplyDelete
 26. //அமெரிக்காவை அழிக்க

  ஒசாமா பலியெடுத்த உயிர்கள்
  மூன்று ஆயிரம்,
  ஒசாமாவை அழிக்க

  அமெரிக்கா கென்ற அப்பாவி மக்கள்
  ஆறு ஆயிரம் - இப்ப சொல்லுங்க
  யார் பயங்கரவாதி ...?//

  சொல்லித்தான் தெரியனுமா பாஸ்

  ReplyDelete
 27. சகோ, தமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 28. சேவாக்கின் அதிரடி எனக்க்குப் பிடிக்கும், ஆனால் ஐபி எல் இனைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
  ஹி...ஹி...
  ஆதலால் அதிகம் சொல்ல முடியலை சகோ.

  ReplyDelete
 29. அமெரிக்கா கென்ற அப்பாவி மக்கள்
  ஆறு ஆயிரம் - இப்ப சொல்லுங்க
  யார் பயங்கரவாதி ...?//

  உலகத்தின் அதிகாரம் எவர் கையில் இருக்கிறதோ, அவர்கள் தங்கள் மமதையினால்,
  எல்லாவற்றையும் மறைத்து, தாம் ஏதோ உயர்ந்தவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.
  அமெரிக்காவை யாராவது முந்தும் அளவிற்கு முன்னேறுகிறார்கள் என்றாலே, போதுமே-
  அமெரிக்கா ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி,
  படை திரட்டி பொர் தொடங்கி விடும்!

  ReplyDelete