மோசமான தோல்வியை பதிவு செய்துகொண்ட இந்திய அணி.

 1974ம் ஆண்டுக்கு பின்னர் முப்பத்தேழு வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் முழுமையாக ஒரு தொடரை இழந்து வெறும் கையேடு மீண்டுள்ளது இந்திய அணி. நிச்சயமாக இது இந்திய  அணியின் டெஸ்ட் வரலாற்றிலும், டோனியின் தலைமைக்கும்  கரும்புள்ளியே.  டெஸ்ட் தரப்படுத்தலில் நம்பர் 1 இடத்தில் இருந்த அணி இவ்வாறு முழுமையாக ஒரு தொடரை இழப்பது என்பது மிகவும் அவமானகரமானது.  

இறுதியாக 2007 ம் ஆண்டு ராவிட்  தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே விளையாடி 1 -0 என்ற ரீதியில் தொடரையும்  கைப்பற்றி இருந்தது. 


ஆனால், உலகக்கிண்ணம், ipl ,மேற்கிந்திய தொடர் என்று தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, இது வரை எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காத கேப்டன் என்ற புகழோடு வலம்வந்த டோனிக்கு இது கடுமையான நேரம்.
 

இந்த வருடத்தில் உலகக்கிண்ணம், ipl , மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்   என்று குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியான போட்டிகள்  வீரர்களுக்கு ஏற்ப்படுத்திய அயர்ச்சி, பயிற்சிகள் மேற்கொள்ள போதிய கால அவகாசம் இன்மை என்றும் அணி சற்றே நலிவடைந்து தான் இருந்தது. அத்துடன், தொடர் தொடங்க முன்னமே சேவாக்கின் இழப்பு..(!) பேசப்பட்டது.

அதன் பின்னர், முதலாவது போட்டியிலே முன்னணி வீரர்கள்  காயம் அடைய ஆரம்பத்திலே அணி குழம்பிவிட்டது. ஆனாலும், இதனால் தான் இந்த தோல்வி என்று சொல்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அத்தனை தோல்விகளும் மிக மோசமானவை. அதிலும் இறுதி இரண்டு போட்டிகளிலும் நம்பர் வன் அணி பெற்ற  இனின்ஸ் தோல்வி! 

முக்கியமாக, சகீர்கானின் இடத்தை நிரப்ப எந்த பந்து வீச்சாளராலும் இயலவில்லை. இரண்டாவது போட்டியில் முதலாவது இனிங்சை தவிர மற்றைய போட்டிகளில் எல்லாம் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இமாலய இலக்கை சாதாரணமாக தொட்டார்கள். போதா குறைக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் சகலதுறை ஆட்டக்காரர்களை போல செயற்ப்பட்டார்கள். 
ஆனால் இந்தியாவின் துடுப்பாட்டமோ  மோசம்.  உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியால் எந்த இனிங்சிலுமே  முன்னூறு ஓட்டங்களை கடக்க முடியவில்லை.
 
                                                                         ( IND vs ENG )
அத்துடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான சூழலை ஏற்ப்படுத்தி கொடுக்கவில்லை. அதாவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தாதன் மூலம் இமாலய இலக்குக்களை எட்டி பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்தி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை அதிகமாக்கிவிட்டார்கள். 

இந்த தொடரை பொறுத்தவரை தனது முழுமையான பங்களிப்பை இந்திய அணி சார்பாக வழங்கியவர் என்றால் அது ராகுல் ராவிட் என்ற தனி நபர் மட்டுமே. நான்கு தொடர்களில் மூன்று சத்தங்கள் உட்பட 461 ஓட்டங்கள். ஒவ்வொரு போட்டியிலும்  இவர் துடுப்பாட்டம் செய்த விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. அதுவும் இறுதி போட்டியில்  முதல் இனிங்சில் ஆரம்ப வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் நின்றார், அந்த இனிங்சில்  ராவிட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க யாராலும் முடியவில்லை. அதுவும் போட்டி இங்கிலாந்து வசமாக காரணமாக அமைந்துவிட்டது. ஒருவேளை இந்த தொடரை இந்தியா வென்றிருந்தாலோ(!) இல்லை தொடர் சமநிலையில் முடிவடைந்தாலோ ராவிட்டின் ஆட்டம் பெரிதும் பேசப்பட்டிருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய விடயம் ராவிட்டின் ஆட்டம் ஒன்று தான்.

இந்த தொடரிலே மேலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட வீரர் சச்சின். அவரின் நூறாவது சத்தத்தை ரசிகர்கள் ஆவலாக  எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஏமாற்றிவிட்டார். இறுதி போட்டியிலே இரண்டாவது இனிங்சில் அதை கடப்பார் என்று எதிர்பார்ப்புக்கள் இருந்த போது 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது கடவுளின் சதியா?  ஏற்கனவே  நான்காவது நாள் ஆட்டத்திலே ஸ்வானின் பந்து வீச்சில் விக்கெட்காப்பாளர் பிரியர் ஸ்டம் செய்தது அவுட்டாக இருந்திருக்கலாம். ஆனால் பிரியர் அம்பயரிடம் முறையிட தவறிவிட்டார். ஒரு வேளை அம்பயர் தர தவறினாலும் ரிவியூ முறைமூலம் மீள்பரிசீலனை செய்திருக்கலாம்.  வீரர்களின் சிறு கவனயீனம், இங்கிலாந்தின் வெற்றி சற்று தள்ளி போய்விட்டது.  

மூன்று தோல்விகளின் பின்னர் நான்காவது போட்டியை சமநிலையில் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடனே இந்தியா களமிறங்கியது. (வெற்றி என்பது ?) இருந்தும்  வழமை போலவே முதல் இனிங்சில்  இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இடையிலே மழைவந்து இந்திய அணிக்கு உதவி செய்ய நினைத்தாலும் இந்திய அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி  துடுப்பாட்ட  வரிசை சர்வ சாதாரணமாக சரிந்தது. ஒரு பக்கத்தில் ராவிட் தூண் போல நின்றாலும், மறு பக்கம் கைகொடுக்க யாரும் இல்லை.  இறுதியில் அமித் மிஸ்ராவின் உதவியுடன் முன்னூறு ஓட்டங்களை தொட்டு ஆட்டமிழந்தார்கள். 

பாலோ ஒன் ஆகி தொடர்ந்து துடுப்பெடுத்தாட மீண்டும் களமிறங்கிய இந்திய அணிக்கு இம்முறை சச்சினும் மிஸ்ராவும் கை கொடுக்க ஏனைய வீரர்கள் நழுவிக்கொண்டார்கள்.   அதன் மூலம் வரலாற்றை புதுப்பித்துக்கொண்டது இந்திய அணி. தொடர் ஆரம்பிக்க முன்னர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தவர்கள் தொடர் முடிவில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெறும் இருபது மாசங்களுடன் நம்பர் வன் என்ற தகுதி கலைந்தது.

இந்த தொடர் முழுவதிலும்  சுரேஷ் ரைனா,  VVS லக்ஸ்மன் என்று இருவர் இந்திய அணி சார்பாக துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி இருந்தார்களாம். யாராவது கண்டீர்களா?

இனி சிறு இடைவெளியில் தொடங்கவிருக்கும் ஒருநாள் தொடரிலாவது இந்திய அணி சாதிக்க வேண்டும். இல்லையெனில் அணி நாடு திரும்பும் போது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  ரொம்ப  நல்லவங்க. 

ஆனால் ஒருநாள் தொடரிலும் அணி நலிவடைந்துவிட்டது. சேவாக் ,காம்பர், யுவராஜ், சகீர்கான் ஹர்பஜன், இசாந்த் சர்மா போன்ற முன்னிலை வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளார்கள். சிறந்த போர்மில் இருக்கும் ராவிட் ஒருநாள் அணிக்கு மீள திரும்பியுள்ளது சற்று ஆறுதல், அனேகமாக ராவிட்டின் இறுதி போட்டியாக கூட இது இருக்கலாம். அந்தவகையில் அவருக்கு இது முக்கியமானது.
சச்சின் இந்த தொடரிலாவது  நூற்றுக்கு நூறு என்ற மைல் கல்லை எட்டுவாரா? இரண்டு சத்தங்கள் அடித்தால் ஒருநாள் தொடரிலும் ஐம்பது சதங்களை எட்ட கூடிய வாய்ப்பு உள்ளது. எனினும் நூறாவது சத்தத்தை எட்டி பிடிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். மற்றும்படி சுரேஷ் ரைனாவின் நிலையும் அணியின் பந்துவீச்சும் கவலைக்கிடமாகவே உள்ளது. இழந்த மானத்தை மீட்டெடுக்க இந்த ஒருநாள் தொடரிலாவது மிக பெரிய வெற்றி பெறவேண்டும்.
சாதிப்பார்களா இல்லை மீண்டும் ரசிகர்களை சோதிப்பார்களா?

36 comments:

  1. சோதனைய கடந்தாத்தான் சாதனா ச்சே சாதனைன்னாங்க...இங்க என்னடான்னா சாதனைய கடந்த அப்புறம்தான் சோதனைகளே போல ஹிஹி!

    ReplyDelete
  2. ////இறுதியாக 2007 ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே விளையாடி 1 -0 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றி இருந்தது.//

    சின்ன குறிப்பு நண்பா
    2007 ல் இந்திய அணியின் தலைவராக கங்குலி இல்லை அவர் 2005ன் கடைசியிலேயே கிரேக் சம்பல் உடனான பிரச்சனைக்குப்பின் கங்குலிதலைவர் பதவியில் இருந்து நீங்கப்பட்டு விட்டார்.நீங்கள் சொன்ன 2007ல் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ராகுல் ராவிட்.

    நிச்சயம் தோனிக்கு கஸ்டகாலம் பிடித்துவிட்டது போல இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை.

    இன்று என்பதிவில்-தோனிக்கு சனி பிடித்துவிட்டதா(சிறப்புப்பார்வை)http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  3. நன்றி பாஸ், சிறு தவறு விட்டுவிட்டேன் திருத்திக்கொள்கிறேன்...

    ReplyDelete
  4. சச்சின் 91 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது ஓன்றும் கடவுளின் சதியாக இருக்காது நண்பா.ஏன் என்றால் சச்சின் 90+களில் ஆட்டம் இழப்பது இது முதல் முறையில்லையே 90+களில்அதிகமுறை ஆட்டம் இழந்தவீரர் என்ற சாதனையையும் தல தன் வசம் வைத்து இருக்கின்றார்.

    அப்பறம் நீங்கள் கேட்டது போல சுரேஸ் ரெய்னா இந்த டெஸ்ட் தொடரில் விளையாடினாரா?ஹி.ஹி.ஹி.ஹி.

    லக்ஸ்மன் ஆவது ஒன்று இரண்டு அரைச்சதமாவது அடித்து இருந்தார்.

    ReplyDelete
  5. இனி வரும் தொடர்களிலாவது மீண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  6. உங்கள் ஆதங்கம் உண்மையானது..
    நன் அணி மீண்டு வரும்..

    ReplyDelete
  7. ஆய்வு முடிவுகள் இப்படிதான் சொல்லுகிறது

    ReplyDelete
  8. ஊருல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா "ஆட தெரியா தேவிடியாக்கு முட்ரம் கோணலாம்" அந்த மாதிரிதான் இருக்கு உங்க பதிவு........................எப்ப பாரு தோதுதுட்டு வந்துட்டு இப்படிதான் சொல்லவேண்டியது, பயிற்சி இல்லை, ஒய்வு இல்லை.............அவனுக்கு காயம் இவனுக்கு காயம்...................என்னங்கட இதெல்லாம் சின்ன புல்லை தனமா இல்லை.....................தோல்வியை ஒதுக்கணும் அதான் உண்மையானா வீரனுக்கு அழகு..............

    ReplyDelete
  9. அட போங்க பாஸ் ... இவங்களுக்கு IPL தானே முக்கியம்.

    ReplyDelete
  10. சறுக்கல்கள் என்பது எப்படிப்பட்ட அணிக்கும் வரும்
    ஆனால் இதுபோல தொடர் சாருக்காக இருக்ககூடாது....
    குறைந்தபட்சம் இருவராவது நல்லா ஆடக்கூடாதா???!!
    அப்படியா விளையாட்டு மறந்துபோச்சு????
    அப்படியா ஆடுகளம் வைச்சிருகாங்க?????

    ReplyDelete
  11. நன்றி பாஸ், சிறு தவறு விட்டுவிட்டேன் திருத்திக்கொள்கிறேன்...

    மாப்பிள இதவைச்சே உன்ன கும்மியிருப்பேன் ஆனா எனக்கு கிரிக்கட் தெரியாதேப்பா பிழைசார் கந்துசாமி..

    ReplyDelete
  12. /// எப்ப பாரு தோதுதுட்டு வந்துட்டு இப்படிதான் சொல்லவேண்டியது, பயிற்சி இல்லை, ஒய்வு இல்லை.............அவனுக்கு காயம் இவனுக்கு காயம்...................என்னங்கட இதெல்லாம் சின்ன புல்லை தனமா இல்லை.// அண்ணே பதிவை படிக்காமல் சும்மா முட்டாள் தனமாய் வந்து உளறப்படாது




    [[[[[முதலாவது போட்டியிலே முன்னணி வீரர்கள் காயம் அடைய ஆரம்பத்திலே அணி குழம்பிவிட்டது. ஆனாலும், இதனால் தான் இந்த தோல்வி என்று சொல்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அத்தனை தோல்விகளும் மிக மோசமானவை. அதிலும் இறுதி இரண்டு போட்டிகளிலும் நம்பர் வன் அணி பெற்ற இனின்ஸ் தோல்வி! ]]]]]]
    இந்த வரிகளை கவனியுங்கள்.. இனியாவது சும்மா லூசுத்தனமா, மேலோட்டமாய் படித்துவிட்டு அசிங்கமாய் கதைக்கிற வேலை இங்கே வேண்டாம்!

    ReplyDelete
  13. இந்தியாவிற்கு சிறந்த ஓபனிங் பேட்ஸமென்கள் இல்லாதது தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது. மிக மிக மோசமான பீல்டிங் வேறு. பந்து வீச்சு மற்றும் பேட்ஸ்மேன்கள் கோட்டை விட்டாலும் பீல்டிங்காவது சிறப்பாக இருக்க வேண்டாமா? பீல்டிங்கில் தேறாத அணி ஜெயிப்பது சிரமம்.

    ReplyDelete
  14. கிரிகெட் பற்றி எனக்கு ஒன்னும் தெரியா சோ வோட் மட்டும்

    ReplyDelete
  15. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..

    ReplyDelete
  16. வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்தானே!

    ReplyDelete
  17. சிரமமெடுத்து நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  18. தோணி தெளிவா இருக்கார்...நாம தான் இந்த எதிர்பார்ப்பு...எல்லாம் வச்சிட்டு...இப்பம் அது professional கேம்...நாலு மாச் தோத்து எட்டு ஜெயிச்சா ஒகே...அவங்களுக்கெல்லாம் விளையாட்டை ரசிக்கவோ..அதை பற்றி யோசிக்கவோ நேரமே இல்லை...சர்கஸ் கோமாளிகள் மாதிரி ஊர் ஊரா போய் perform பண்றது தான் இப்போதைக்கு அவங்க வேலை...

    ReplyDelete
  19. // இங்கிலாந்து மண்ணில் முழுமையாக ஒரு தொடரை இழந்து வெறும் கையேடு மீண்டுள்ளது இந்திய அணி.

    திரும்பலையே திரும்பலையே!! இன்னும் அங்கதானே நிக்கினம்! கந்தசாமி பிழை விட்டுட்டார்!

    ReplyDelete
  20. அதாவது டெஸ்ட் தொடரில் இருந்து வெறும் கையேடு மீண்டுள்ளார்கள் என்று சொல்லவந்தேன்;-)

    ReplyDelete
  21. பல காரணங்கள் இருக்கின்றன.அதை உணர்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

    ReplyDelete
  22. அடடா..இந்தியா தோத்துடுச்சா?

    ReplyDelete
  23. என்ன கொடும சார் இது .....
    http://wesmob.blogspot.com/2011/08/tumblr-start-new-blog-for-you.html

    ReplyDelete
  24. நல்ல விரிவான அலசல் பாஸ்!
    ஹிஹி ஆமா சுறேஸ் ரெய்னா?
    யார் அந்த சுழல் பந்து வீச்சாளர் தானே?
    பரவாய் இல்லை எதோ நாலஞ்சு விக்கட் எடுத்து இருக்கிறார்!!
    முட்டைகளும் கூட!

    ReplyDelete
  25. //இழந்த மானத்தை மீட்டெடுக்க இந்த ஒருநாள் தொடரிலாவது மிக பெரிய வெற்றி பெறவேண்டும்.
    சாதிப்பார்களா இல்லை மீண்டும் ரசிகர்களை சோதிப்பார்களா?//

    இதைத்தான் நானும் எதிர்பார்த்து இருக்குறேன்...

    ReplyDelete
  26. ஒரு நாள் தொடரிலாவது சாதிக்கிறார்களா என்று பார்ப்போம்!!

    ReplyDelete
  27. அண்ணே... நீங்க ஒரு பதிவா போட்டு வெந்த புண்ணுல......!

    ReplyDelete
  28. சச்சின் 91ல் ஆட்டமிழந்தது தான் உச்சக்கட்ட ஃபீலிங்...

    ReplyDelete
  29. கிரிக்கெட்டா அப்புறமா வாறன்,,,

    ReplyDelete
  30. வெற்றியும் தோல்வியும் சகஜம்

    ReplyDelete
  31. வணக்கம் மச்சி...

    வந்தேன் படித்தேன்...

    கமெண்டாக என்ன போடலாம் என யோசிக்கிறேன்.

    ReplyDelete
  32. இந்திய அணிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் அல்லது இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  33. கிரிக்கெட் பற்றிய பதிவுக்கு பாராட்டுக்கள்.......

    தங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  34. அனைவரின் ஆதங்கமும் இதுதான்
    மிகத் தெளிவாக அதை பதிவு செய்துள்ளீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. //வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்தானே!//

    ReplyDelete
  36. இனி வரும் தொடர்களிலாவது வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete