மானே நிற்ப்பாய்.

நம் தொன்மைகளை அறிந்துகொள்ளும் போது ஏற்ப்படும் பிரமிப்பும் ஆச்சரியங்களும்  இன்னும் இன்னும் அவை தொடர்பான தேடல்களை அதிகரிப்பதாகவே இருக்கும்.  அதாவது என்ன சொல்ல வர்றேன் என்றால், ஈழத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஊர்களுக்கும் அவ் ஊர்களுக்கு  பெயர் வருவதற்க்கான  காரணமும்  இருக்கும். ஈழத்துக்கு மட்டும் அல்ல அனைத்து நாடு, நகரம், இடங்களுக்கும்  இது பொருந்தும். தேடிப்பார்த்தால் காரணப்பெயர் புரியும், சில புதிராக இருக்கும். சரி விடயத்துக்கு வருவோம்.

ஈழத்திலும் இப்படி தான், சில ஊர்களுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காரணங்களை சொல்வார்கள். அநேகமானவை பழங்கால வரலாறுகளுடனோ இல்லை புராணங்களுடனோ   தொடர்புடையதாக இருக்கும்.  சில காரணப்பெயர்கள் சுவாரசியமானதாக, அவ் ஊர்களின் தொன்மையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் சில வேடிக்கையாகவும் இருக்கும்.  உதாரணமாக நான் வாழும் வலிகாமம் பிரதேசத்திலே உள்ள சில கிராமங்களுக்கு சோழர் காலத்துடன் இணைத்து காரணப்பெயர்கள் உண்டு.அந்த வகையில் தான் யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரு அழகிய இடம்  மானிப்பாய். தற்சமயம் கிராமம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இந்த ஊருக்கு மானிப்பாய் என்று பெயர்  வருவதற்கான காரணத்தை அறிந்த போது   உண்மையாகவே வேடிக்கையாக இருந்தது. அதாவது இதை இராமாயணத்துடன் தொடர்புபடுத்தியுள்ளார்கள்.


சீதையை கவர்ந்து செல்வதற்காக இராவணன் தன் மாமனான மாரீசனை மான் வடிவில் இராமன் இருக்கும் வனப்பகுதி நோக்கி செல்ல வைக்கிறான். அவனும் மான் உருவில் அவ்விடம் செல்லவே அந்த  மானை பிடித்து தருமாறு இராமனிடம் வேண்டுகிறாள் சீதை.  மனைவியின் ஆசையை நிறைவேற்ற மானை துரத்திக்கொண்டு செல்கிறான் ராமன்.  ஒரு கட்டத்தில் மானின் ஏமாற்று போக்கால் களைப்படைந்த இராமன் மானை நோக்கி "மானே நிற்பாய்" என்று சத்தமிடுகிறான். அவ்வளவு தான் இராமன் மானை நோக்கி "மானே நிற்பாய்" என்று சொன்ன இடமே பிற்காலத்தில் "மானிப்பாய்" என்று மருவியதாக சொல்லுகிறார்கள்.


மறுபுறம்   நீண்ட நேரமாகியும் வராத ராமனை தேடி இலக்குவணன்  செல்ல அந்நேரம் பார்த்து இராவணன் தன் நோக்கத்தை நிறைவேற்ற சீதையை கவர்ந்து செல்கிறான். அதன் பின்னர் ராமனும் இலக்குவணனும் சீதையை தேடி காடுகள் எல்லாம் அலைகிறார்கள். அதே சமயம் இராவணன் தான் சிவனிடம் பெற்ற வரம் மூலம் பாரிய பூகம்பத்தை வரவைத்து  ராமன் இருந்த பகுதிக்கும் தனது ஆட்சிக்குரிய பகுதிக்குமிடையே பிளவை ஏற்ப்படுத்துகிறான்.  அதுவே பிற்காலத்தில் பாக்கு நீரினை என்று பெயர் பெற்றதாம்.  அதன்பின்னரான  கதை தான் எல்லோரும் அறிந்ததே. இதே போல தான் அருகிலுள்ள மூளாய் என்ற பிரதேசத்துக்கும் இராமாயணத்துடன் தொடர்புடைய கதை சொல்லுவார்கள்.

நெருப்பில்லாமல் புகை வராதே! ஆனால்  இவற்றை முழுமையாக நம்புவதற்கு இடமில்லை.  காரணம் இராமாயணம் என்ற புராணம்  நடந்ததற்கான சில பல ஆதாரங்களை சுட்டி காட்டினாலும் இனமும் அவை நிரூபிக்கப்படவில்லை. அத்தோடு இலங்கை இந்தியா என்பது இற்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தே இருந்ததாகவும்  (குமரிக்கண்டம்) பின்னர் ஏற்ப்பட்ட பாரிய கடற்கோளாள்களால்  பிரிந்ததாகவும் ஆராச்சியாளர்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை. அதோடு  இற்றைக்கு  17 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்ப்பட்ட பிரிவே பாக்கு நீரினை என்று இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள், அங்கே காணப்படும் மணல் திட்டிகளை ஆதாரமாக சுட்டிகாட்டுகிறார்கள்.

பல ஆயிரம்  (9000 ? ) ஆண்டுகளுக்கு முன்னர்  ஏற்ப்பட்ட கடற்கோள்களால்  கடல் உள்வாங்கியவையே  துவாரகை, பூம்புகார், மாமல்லபுரம் போன்ற தமிழரின் தொன்மை வாய்ந்த நிலங்கள்  என்று ஆராச்சியாளர்கள் ஆதார பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். ஆனால் இன்னமும் இவை தொடர்பான ஆராய்ச்சிகளோ ஆய்வுகளோ தொடங்கப்படவில்லை.  இவை தொடங்கினால் பல கேள்விகளுக்கு,குழப்பங்களுக்கு  விடை கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.  பல ஆராச்சியாளர்கள் ஆர்வமாக இருந்தும் பெரும் பிரச்சனையாக இருப்பது மில்லியன் கணக்கில் செலவாகும் நிதி.  தன் பின்னால் ( பெயரின் பின்னால் அல்ல ஹிஹிஹி ) பெருமளவு நிதியை கொண்டுள்ள நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார்  என்றால் தமிழரின் தொன்மை மட்டுமல்லாது  இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும்.

17 comments:

 1. நல்ல அரிய பல விஷயங்களுடன் கூடிய அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. //சரி விடயத்துக்கு வருவோம்.//

  நீங்க சொல்லலேனா நான் சொல்லியிருப்பேன்..

  ReplyDelete
 3. //அதன்பின்னரான கதை தான் எல்லோரும் அறிந்ததே. //

  இதுக்கு முன்னாடியும் தெரியும் பாஸ்.. கொஞ்ச நேரம் விட்டிருந்தீங்கனா கடுப்பாயிடுவன்..

  ReplyDelete
 4. // இனமும் அவை நிரூபிக்கப்படவில்லை.//

  இனமும் இல்ல இன்னமும்.. சொல்லுங்க பாப்போம்.. சரி சரி.. உங்களுக்கு நிரூபிக்க தானே வேணும் ராமர் பாலம் தெரியாதா.? ஹி ஹி.. சிக்க வச்சிபுடுவன்..

  ReplyDelete
 5. // நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார் என்றால் தமிழரின் தொன்மை மட்டுமல்லாது இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும்.//

  மனசுல என்ன நினச்சுகிட்டு இருக்கீங்க.? அவரோட வெளிய தெரிந்த மற்றும் உள்ளே புதைந்திருக்கும் குடும்பத்துக்கெல்லாம் அப்பரம் யார் செலவு செய்யுறது.? ஹி ஹி

  ReplyDelete
 6. //// வை.கோபாலகிருஷ்ணன் said...

  நல்ல அரிய பல விஷயங்களுடன் கூடிய அருமையான பதிவு. பாராட்டுக்கள்.// நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு..

  ReplyDelete
 7. ///////// தம்பி கூர்மதியன் said...

  // இனமும் அவை நிரூபிக்கப்படவில்லை.//

  இனமும் இல்ல இன்னமும்.. சொல்லுங்க பாப்போம்..//////////// அவ்அவ்அவ்அவ்அவ்அவ்...வருதில்லையே ............

  ReplyDelete
 8. ///உங்களுக்கு நிரூபிக்க தானே வேணும் ராமர் பாலம் தெரியாதா.? ஹி ஹி.. சிக்க வச்சிபுடுவன்../// பாஸ்! இலங்கை இந்தியா முன்னர் இணைந்து இருந்ததாம், இற்றைக்கு 17000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட நீர் மட்ட அதிகரிப்பால் வந்தது தான் பாக்குநீரிணை என்ற கருத்தும் உண்டு...அதற்க்கு ஆதாரமாக அங்கே காணப்படும் மண் திட்டிகளை சொல்லுகிறார்கள். அந்த மண் திட்டிகளை தான் நாம் இராமர் பாலம் என்கிறோம்.

  ReplyDelete
 9. // "தமிழின தலைவர்" ///

  அந்த கல்லை எட்றா.......

  ReplyDelete
 10. மிக முக்கியமான விடயங்களை அருமையாய் சொல்லியிருகிரீன்கள் கந்தசாமி வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் படைப்புகளை

  ReplyDelete
 11. //தன் பின்னால் ( பெயரின் பின்னால் அல்ல ஹிஹிஹி ) பெருமளவு நிதியை கொண்டுள்ள நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார் என்றால் தமிழரின் தொன்மை மட்டு மல்லாது இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும். //
  அவ்வாறில்லாவிடினும்,பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்,விஞ்ஞான பூர்வ ஊழலுக்காக!
  நல்ல பதிவு!

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ said...

  // "தமிழின தலைவர்" ///

  அந்த கல்லை எட்றா.......// ஐ யாம் எஸ்கேப்

  ReplyDelete
 13. யாதவன் said...

  மிக முக்கியமான விடயங்களை அருமையாய் சொல்லியிருகிரீன்கள் கந்தசாமி வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் படைப்புகளை/// நன்றி யாதவன்

  ReplyDelete
 14. /// சென்னை பித்தன் said...

  //தன் பின்னால் ( பெயரின் பின்னால் அல்ல ஹிஹிஹி ) பெருமளவு நிதியை கொண்டுள்ள நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார் என்றால் தமிழரின் தொன்மை மட்டு மல்லாது இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும். //
  அவ்வாறில்லாவிடினும்,பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்,விஞ்ஞான பூர்வ ஊழலுக்காக!
  நல்ல பதிவு!/// நன்றி ஐயா நீங்கள் சொல்வதும் உண்மை தான் ))))

  ReplyDelete
 15. // நம் "தமிழின தலைவர்" இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டார் என்றால் தமிழரின் தொன்மை மட்டுமல்லாது இவர் பெயரும் வரலாற்றிலே நிலைத்துநிற்கும்.//விஞ்ஞான பூர்வ ஊழலுக்காக!
  நல்ல பதிவு!/// நன்றி ஐயா நீங்கள் சொல்வதும் உண்மை தான் ))))

  ReplyDelete
 16. அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 17. அருமையான ஒரு அலசலைத் தவற விட்டு விட்டேனே சகோ.

  ReplyDelete