நாயை வெட்டும் நரிகள்..!

யுத்தம்  முடிந்து  சமாதானம்  ஏற்ப்பட்டு விட்டது;  இனி  மக்கள்  அமைதியான சுதந்திரமான  வாழ்க்கை  வாழலாம் (!) என்று சொல்லிக்கொண்டே ஆயிரக்கணக்கான  மக்களை கொன்று குவித்து  அதை  புறநகர்  பகுதியிலே பாற் சோறு  கொடுத்து  கொண்டாடி  மகிழ்ந்த அரசு,   இன்று   வேதாளம் முருங்கை  மரம்  ஏறுகிற  கதையாக   மீண்டும்   மக்களை   என்பதுகளுக்கு இழுத்து செல்கிறதா?

மக்கள்  சுதந்திரமாக   அமைதியான  வாழ்க்கை  வாழவேண்டும்  என்று கருதினால்  யுத்தம்  முடிந்த கையேடு  முதல் வேலையாக  இந்த ஒட்டுக்குழுக்களை  நிர்வாணம்  ஆக்கி  இருக்கவேண்டும்.  அதாவது அவர்கள் ஆயுதம் களையப்பட்டு அடித்து  துரத்தியிருக்க  வேண்டும்.  ஆனால் அதை  செய்யாது  ஒரு  துளியும்  தகுதியில்லாதவர்களை  எல்லாம்   பாராளுமன்றத்தில் வைத்து அழகுபார்க்கிறது.


அதற்கு  கைமாறாக "நம்மவர்களும்"  இன்று  நடக்கவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலிலே தமது  விசுவாசத்தை  காட்ட  இனவாத  அரசை நோக்கி  தங்கள் வால்களை ஆட்ட  வெளிக்கிட்டுவிட்டார்கள் .

ஒரு  நாயை  பிடித்து  அதன் தலையை  துண்டித்து  தன்  எதிரியாக கருதப்படுபவன் (!)  வீட்டு  வாசலிலே குற்றி நடும்  அளவுக்கு  நம்மவர்கள்  மனம் உள்ளது.  இருந்தும் ஆச்சரியப்படவதற்க்கில்லை,  மனிதனையே வெட்டும் இவர்களுக்கு  நாயெல்லாம்  எந்த  மட்டு..!

கடந்த  எட்டாம்  திகதி  எங்கள்  ஊருக்கு  அருகிலுள்ள ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின்  வீட்டிலேயே  இந்த விசுவாசிகள் தங்கள் அட்டகாசத்தை  காட்டியுள்ளார்கள்.  நள்ளரவில் புகுந்து வீட்டுக்கு   தார்  நிரப்பிய  பைகளால் வீசியுள்ளார்கள்.  கூடவே  சிறிது  நேரம் அங்கே உட்கார்ந்து தண்ணியும் அடிச்சு அங்கயே போத்திலையும்   அடித்து  உடைத்துவிட்டு போயுள்ளார்கள்.   அப்ப  பாருங்களன்,  எவ்வளவு  துணிவு  என்று..  நள்ளிரவு தானே  "சட்டமும் தூங்கிவிட்ட  நேரம் போலும்."  இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியாக  இருந்தது,   காரணம்  அவர்  ஒரு ஆசிரியரும்  கூட.   உயர்தரம் படித்தது  அவர் கல்வி  நிறுவனத்தில் தான்.


நிச்சயமாக  இது  இராணுவத்தின்  நேரடி   வேலையாக  இருக்காது.  அவர்கள் ஆசியுடன்   நம்மவர்  விசுவாசிகளின்  நன்றிக்கடன்கள்! 

கடந்த   மாதம்  அளவெட்டியில் கூட்டமைப்பு  மீதான  தாக்குதல்  சம்பவத்துக்கு  பின்னர்  தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்ட  வன்முறைகளில்  இது  கடைசியாக  இடம்பெற்றுள்ளது .   பாவம்,  இந்த முட்டாள்களுக்கு புரியவில்லை இப்படி கூட்டமைப்பு  மீது  மேற்கொள்ளும்   வன்முறைகள்   இன்னமும் மக்களை  அவர்கள்  பால் நெருக்கமாக்கும்    என்று...  இருந்தும்  நாட்டிலே  சமாதானத்தை  விரும்பும்  அரசு (!)  இதை  தொடர்ந்து  அனுமதிக்கப்போகிறதா?  இல்லை   தமிழ்   மக்களின் வேலியாக  தன்னை  வெளி  உலகுத்துக்கு  காட்டிக்கொண்டு  வழமை  போலவே   அவர்களை மேய(விட)ப்போகிறதா?

40 comments:

  1. நாங்க முதல் ஆள் இல்லே...

    ReplyDelete
  2. இருங்கோ படிச்சுட்டு வாறன்

    ReplyDelete
  3. என்னத்த சொல்றது பாஸ்! காலங்காலமா நடந்துட்டே இருக்கு...!

    ReplyDelete
  4. என்னத்த சொல்லுறது பாஸ்
    சாத்தான்கள் எப்போதும் தன இன சாத்தனுகளுக்குத்தானே உதவும்
    இவர்களை நன்ம்புவதும் இவர்களிடம் எதிர்பார்ப்பதும்
    நம்ம தப்பு தான்

    ReplyDelete
  5. //யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்ப்பட்டு விட்டது. இனி மக்கள் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை வாழலாம் (!)//

    எம் இனத்துக்கு எப்போதும் விடிவு இல்லை பாஸ்
    நாம் வாங்கிவந்த வரம் அப்படி பாஸ்

    ReplyDelete
  6. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்ப்பட்டு விட்டது. இனி மக்கள் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை வாழலாம் (!)//

    அப்படித்தான் எதிர்பார்த்தோம். பதிவு மனம் கனக்க வைக்கிறது.

    ReplyDelete
  7. //மக்கள் சுதந்திரமாக அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று கருதினால் யுத்தம் முடிந்த கையேடு முதல் வேலையாக இந்த ஒட்டுக்குழுக்களை நிர்வாணம் ஆக்கி இருக்கவேண்டும்.//

    அதெப்படி நிர்வானமாக்குவார்கள்
    அவர்களை வளர்ப்பதே இவர்கள் தானே

    ReplyDelete
  8. //தகுதியில்லாதவர்களை எல்லாம் பாராளுமன்றத்தில் வைத்து அழகுபார்க்கிறது.
    //

    இப்படி தகுதி இல்லாதவர்கள்தான்
    அவர்கள் பார்வையில் தகுதியானவர்கள்.

    ReplyDelete
  9. //சட்டமும் தூங்கிவிட்ட நேரம் போலும்." //

    சட்டம் எப்போ சார் இவங்க ஊரில் முழிச்சு இருந்து இருக்கு

    ReplyDelete
  10. சட்டம் மட்டுமா தூங்குகிறது?

    ReplyDelete
  11. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்

    ReplyDelete
  12. துணிவான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த துயரம்.

    ReplyDelete
  14. பதிவில் வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறீர்கள்..

    இன்னும் தொடர்கிறதா தமிழனின் துயரம்?

    அய்யகோ..! இதற்கு விடிவு என்றுதான் வருமா?

    ReplyDelete
  15. சகோ/ஏனென்று கேட்க யாருமில்லா ஏதிலிகளாகிவிட்டோம்.என்ன செய்வது.எமக்குள்ளே புலம்புவோம் ஏக்கங்களை.பதிவிற்கு வாழ்த்துக்க்ள்.

    என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

    ReplyDelete
  16. மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இருக்கு. எப்போதுதான் முழுமையான விடியல் காணக்கிடைக்குமோ நம் சகோதர சகோதரிகளுக்கு. என்று தீருமோ தமிழனின் துயரம்? மனம் கனக்கச்செய்கிறது தங்கள் பதிவு.

    ReplyDelete
  17. என்று மாறும் இந்த நிலை?

    ReplyDelete
  18. நானும் பார்த்தேன் பாஸ்...
    என்ன கொடுமையோ..கேக்க முடியாத நிலைமை...

    ReplyDelete
  19. என்ன செய்யிறது பாஸ்...

    ReplyDelete
  20. இவர்களுக்கு இன்னுமா ரத்தப்பசி அடங்கவில்லை..

    ReplyDelete
  21. பாத்து கதையுங்கோ கந்தசாமி! இவங்கள் பொல்லாதவங்கள்!

    ReplyDelete
  22. முற்றும் முழுதுமாய் எம் மண் சீரழிக்கப்படடு விட்டது, இதற்கு எம் இனத்தவனும் துணைபோவது வேதனைக்குறியது. இந்த ஆட்டம் பாட்டங்களுக்குத் தானே இந்த சொறிநாய்கள் தன் இனததையே கொலைவெறியருக்குக் காட்டிக் கொடுத்து அழித்தது. எம் விதி அப்படி யாரை நோவது.

    ReplyDelete
  23. முற்றும் முழுதுமாய் எம் மண் சீரழிக்கப்படடு விட்டது, இதற்கு எம் இனத்தவனும் துணைபோவது வேதனைக்குறியது. இந்த ஆட்டம் பாட்டங்களுக்குத் தானே இந்த சொறிநாய்கள் தன் இனததையே கொலைவெறியருக்குக் காட்டிக் கொடுத்து அழித்தது. எம் விதி அப்படி யாரை நோவது.

    ReplyDelete
  24. துணிவான பதிவு

    ReplyDelete
  25. நாயை வெட்டும் நரிகள்..!//

    சலலலலா......சகலலலலா.....

    இப்பவே கண்ணைக் கட்டுதே, தலைப்பே ஒரு திரில் பட ரேஞ்சில் இருக்கே. இருங்க உள்ளே இறங்கிப் பார்ப்போம்.

    ReplyDelete
  26. அரசு இன்று வேதாளம் முருங்கை மரம் ஏறுகிற கதையாக மீண்டும் மக்களை என்பதுகளுக்கு இழுத்து செல்கிறதா?//

    ங்....கொய்யாலா. கேட்கிறான் பாரு கேள்வி. இதனை மைக் செட் போட்டு, அலரி மாளிகைக்கு முன்னால் நின்று கேட்டாலாவது பேப்பரிலை போட்டோவோடை நியூஸாக வரும். இப்படிக் கேட்டால் சிகப்புச் சால்வை அங்கிளின் காதில் ஏறுமோ மச்சி...


    ஹி....ஹி...

    ReplyDelete
  27. அரசு இன்று வேதாளம் முருங்கை மரம் ஏறுகிற கதையாக மீண்டும் மக்களை என்பதுகளுக்கு இழுத்து செல்கிறதா?//

    அடிங்...ஐயாயிரம் ரூபா நோட்டை ஐயா அச்சடித்து விடும் போதே தெரிய வேணாம், நாடு எப்படி அதள பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பது?

    ReplyDelete
  28. மக்கள் சுதந்திரமாக அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று கருதினால் யுத்தம் முடிந்த கையேடு முதல் வேலையாக இந்த ஒட்டுக்குழுக்களை நிர்வாணம் ஆக்கி இருக்கவேண்டும்.//

    அது சரி, எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்பட்டு, எப்பவுமே பின்னாலை ஒட்டியிருக்கிற நாய்களை எப்படியப்பா விரட்டியடிக்க முடியும்?

    அதாலை விரட்டவும் முடியாது,
    பொருத்தமான பதிவியும் கொடுக்க முடியாது என்ற நிலையில் ஒன்றாக வைத்திருக்கத் தானே வேண்டும் மச்சி,

    ReplyDelete
  29. ///ங்....கொய்யாலா. கேட்கிறான் பாரு கேள்வி. இதனை மைக் செட் போட்டு, அலரி மாளிகைக்கு முன்னால் நின்று கேட்டாலாவது பேப்பரிலை போட்டோவோடை நியூஸாக வரும். இப்படிக் கேட்டால் சிகப்புச் சால்வை அங்கிளின் காதில் ஏறுமோ மச்சி...// போட்டோ வரும் ஆனா மரண அறிவித்தல் பக்கத்திலை எல்லோ வரும்...))

    ReplyDelete
  30. ஆனால் அதை செய்யாது ஒரு துளியும் தகுதியில்லாதவர்களை எல்லாம் பாராளுமன்றத்தில் வைத்து அழகுபார்க்கிறது..//

    யார் சொன்னது ஒரு துளியும் தகுதியில்லாதவர்கள் என்று, எப்போதாவது உணர்சிவசப்பட்டு உண்மைகளைப் பாராளுமன்றம்- ஊடகங்கள் வாயிலாகச் சொல்லும் வல்லமை படைத்தவர்கள் தானே அவர்கள் மச்சி.

    ஹி,.....ஹி....

    ReplyDelete
  31. வீட்டு வாசலிலே குற்றி நடும் அளவுக்கு நம்மவர்கள் மனம் உள்ளது. இருந்தும் ஆச்சரியப்படவதற்க்கில்லை, மனிதனையே வெட்டும் இவர்களுக்கு நாயெல்லாம் எந்த மட்டு..!//

    ஹா.....ஹா...சரியான சாட்டையடி. ஆனால் மானத்தை ஆடையாக அணிந்திருக்கிற ஆட்களுக்குத் தான் இது உறைக்கும்.

    ReplyDelete
  32. பாவம், இந்த முட்டாள்களுக்கு புரியவில்லை இப்படி கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் வன்முறைகள் இன்னமும் மக்களை அவர்கள் பால் நெருக்கமாக்கும் என்று... //

    பாஸ், என்ன செய்வது, எங்கே அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறதோ, அதன் பக்கம் தானே மக்களும் விடுப்பு அறியும் நோக்கில் தலையைக் காட்டுவார்கள்.

    ஆகவே பாதிக்கப்பட்ட கூட்டத்தின் வெற்றியை இன்னும் இலகுவாக இந்த அடி தடிக் கூட்டமே வழி அமைத்துக் கொடுக்கிறது.

    நடக்கட்டும், நடக்கட்டும்.

    ReplyDelete
  33. மக்கள் சுதந்திரமாக அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று கருதினால் யுத்தம் முடிந்த கையேடு முதல் வேலையாக இந்த ஒட்டுக்குழுக்களை நிர்வாணம் ஆக்கி இருக்கவேண்டும்.//
    உண்மைதான் சகோ . நிர்வாணம் ஆக்கினாலும் இவர்கள் மானம் கேட்டவர்கள் . பதவிக்காகவும்
    பணத்துக்கும் எம் இனத்தை சுரையாடவே செய்வார்கள் .
    துணிச்சலான எழுத்துக்கள் சகோ

    ReplyDelete
  34. tholara padtha seithikal manavarutham tarukinrathu........neengal illaigiyil irukirirkala?

    ReplyDelete
  35. என்ன நடக்கிறது ஈழத்தில்
    ஒன்றுமே பரியவில்லை
    இறைவா...

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. யாருமே தட்டிக் கேட்க ஆளில்லாத அநாதைகளாவிட்டோம்.தனியாகப் பெண்கள் வெளியில் செல்லமுடியாத நிலைமையும் கொடுமை !

    ReplyDelete
  37. பதிவை தாமதமாக படித்தேன்.துணிவான பதிவு.

    பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கை அரசு திறம்படவே செய்கிறது.

    ReplyDelete
  38. ///பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கை அரசு திறம்படவே செய்கிறது.//உண்மை தான் பாஸ் ...

    ReplyDelete