கடவுளை கண்டேன்..!நள்ளிருட்டு,
மூணு மணி நேரம்
இருக்கையில் அமர்ந்து
சினிமா பார்த்த களைப்பு வேறு ,
நாய்கள் குரைக்க
சிறு நடுக்கத்தோடு தெரு ஓரமா
தனித்து நடந்துகொண்டிருந்தேன்!

சற்று தூரத்தில்
ஒரு உருவம் ,
வெள்ளை வேட்டியும்
தலை நீள முடியுமாக..!

என்னருகில் வரவும்
"என்னய்யா நடிகரா நீங்க?"
சினிமா நினைப்பில் கேட்க,
நான் தான் "கடவுள்" என்று
பதிலும் வந்தது..!

சற்று திகைப்புடன்,
"எங்க போறிங்க இந்த நேரத்தில?"
ஆவலோடு கேட்டேன் நான்!

"சிறிது காலமா
என்னை தேடி வரும் பக்த கூட்டம்
வெகுவா  குறைஞ்சு போச்சு  "
சலித்துக்கொண்டார் கடவுள்!

ஆச்சரிய குறியை நானும்
முகத்தில் காட்டவே
புரிந்துகொண்டவராக
கடவுள் தொடர்ந்தார்..

"(ஆள்) சாமிகள்"
மக்களை தம் பக்கம்
இழுக்கும் சூட்சமம்
பெரிதாக நான் அறியிலேன்!
அறிந்துகொள்ளலாம்   என
ஆச்சிரமங்கள் தேடுகிறேன் !என்று
சொல்லி நகர தொடங்கினார்..!

"காவி உடுத்தவன்
கடவுளாகிறான்" என்று
நானும்  முனு முணுக்க -அது
காதில் விழுந்தவராக,
திரும்பி புன்னகைத்து
கடவுளும் சென்றுவிட்டார்!

சிறிது நாட்களின்  பின்
மீண்டும் அந்த "கடவுளை" கண்டேன்..
காவி உடையும்
கழுத்தில் உருத்திராட்சமுமாக
தொலைக்காட்சி பெட்டியில் ...! 

2 comments:

  1. வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/50.html

    ReplyDelete
  2. அட, ஆமாங்க. எங்கவீட்டு டிவியில நானும்கண்டேன். பெண்னுடன் அந்தக் சாமிய,

    ReplyDelete