இவர்களுக்கு எப்போ கல்யாணமாச்சு!


சுவாரசியம் இல்லாத வாழ்க்கை சுண்ணாம்பு அடிக்காத சுவர் போல.. அழகாகவும்  இருக்காது, கூடவே  ஒருவித வெறுமையும்... ! (யார் சொன்னது என்று எல்லாம் கேட்க்கப்படாது!) 

சமீபத்தில் "கல்யாணம்" என்ற கருவில் எழுதவிருந்த பதிவுக்கு புகைப்படம் தேவைப்பட்டது. ஆகவே எம்பெருமான் கூகுளின் உதவியை நாடினேன். வழக்கம் போல கூகுளில் இமேஜ்'ல்  சென்று கல்யாணம் என்று டைப் பண்ணி search 'ஐ  அழுத்தினேன். என்ன அதிசயம், வந்த முதலாவது படமே காமெடித்தனமான  அதிர்ச்சியை தந்தது. ஆமாங்க இவர்கள்  எப்போ கல்யாணம் செய்துக்கிட்டார்கள்!

பாருங்கோ, சூரியா ஜோதிகாவுக்கு கூட இரண்டாவது இடம் தான் 

எவரோ  இந்த இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து புகைப்படத்தை இணையத்தில் உலாவ விட்டுவிட்டார்கள். கொடும, அது கூகுளில்  முதல் பக்கத்தில முதலாவது புகைப்படமாக  வந்து நிற்கிறது.  இதை சம்மந்தப்பட்டவர்கள் பார்த்திருந்தால் அவர்களின் மனநிலை எப்பூடி இருந்திருக்கும்;-)

-----------------------------------------------------------------------------------------------------------------

பெரிய ஒரு புயலில்  இருந்து விடுபட்டு வெள்ளப்பெருக்கில்  மாட்டிக்கிட்தோ தமிழகம்!  திமுக ஆட்சி ஒழிந்ததாக சந்தோசப்பட்டது  நீண்ட நாள் நிலைக்கவில்லை. சில வாரங்களிலே தான் ஆட்சிக்கு வந்ததன் அடையாளமாக ஜெயா மேடம் தன் முதல் அதிரடி நடவடிக்கையை நிகழ்த்திவிட்டார்.  கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது,  இது அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால் என் கேள்வி! கலைஞர் ஆட்சியின் போது தமிழர்களின் புது வருடப்பிறப்பு தை முதல் நாள்  என்று நடைமுறைப்படுத்தப்பட்டது, (எனக்கும் இது தான் சரி என்று தோன்றுகிறது)  ஆனால் இப்போ ஆட்சி மாறியாதால் கூடவே இதுவும் மாறுமா?  மீண்டும் சித்திரை மாதத்தில் தான் தமிழர்களின் புதுவருடம் என்று கொண்டுவரப்படுமா..?



 எதிர்காலத்தில் "தை முதல் தேதி தமிழர்களின் புதுவருசம்" என்று எண்ணும்  போதெல்லாம் அங்கே கலைஞர் தான் முன் நிற்பார்,  இது ஜெயா மேடத்துக்கு பிடிக்காதே!  எது எப்படியோ இந்த இரண்டு நபர்கள் (கட்சிகள்)  குடுமிச்சண்டையில்(!)  உருளப்போவது என்னமோ  தமிழர்கள் தலை தான்!

------------------------------------------------------------------------------------------------------------------


கடந்த பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டியிலே இலங்கை சார்பாக பங்குபற்றி தங்கம் வென்ற  குத்துச்சண்டை வீரர் மஞ்சு  வன்னியராட்சி  "தடை செய்யப்பட்ட" ஊக்கமருந்து பாவித்ததாக சர்ச்சையில் சிக்கியது  அறிந்ததே.
இப்பொழுது மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க உலக கிண்ண போட்டிகளிலே "தடை செய்யப்பட்ட"" ஊக்கமருந்து பாவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது...

இதற்க்கு முன்னர் தமிழர்கள் மீது "தடை செய்யப்பட்ட" குண்டுகள் வீசி அநியாயமான வழியில் யுத்தம் செய்ததாக ஐநா வரை விசாரணை  நீண்டு கொண்டுள்ளது......,  அதற்கிடையில் மீண்டும் ஒரு "தடை செய்யப்பட்டதா!".    இது  இலங்கையின்  "தடை செய்யப்பட்ட" காலப்பகுதி போல!! (எல்லாவற்றிற்கும்  ஒரு நாள் நியாயம் கிடைக்காமலா போய்விடும்!)


40 comments:

  1. mமுதலாவது போட்டோ.... ஹா... ஹா.... செம காமெடி!

    ReplyDelete
  2. ரெண்டாவது சிந்தனையும் அருமை! பொருத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  3. இது அநியாயங்க...போட்டோவில் எப்படியெல்லாம் விளையாடுராங்க பாருங்க...

    ReplyDelete
  4. இன்றைய தங்கள் பதிவும் அருமை

    ReplyDelete
  5. மூன்றிலும் தங்கள் ஆதங்கம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. முக்கனி பதிவு சகோ, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை , கற்பக கலவை

    ReplyDelete
  7. இவங்க காமெடிக்கு ஒரு அளவே கிடையாதா?

    ReplyDelete
  8. நல்ல பதிவு ... வாழ்த்துக்கள்.. !

    ReplyDelete
  9. இப்படியெல்லாமா செய்வாங்க!

    நல்ல பதிவு!

    ReplyDelete
  10. முக்கனி தித்திப்பு.

    ReplyDelete
  11. மச்சி, அவசரமா வெளியே போகனும், ஓட்டு மட்டும் குத்திப் போட்டு போறேன். கருத்துக்களோடு இரவு வருகிறேன்.

    ReplyDelete
  12. கல்யாணமாம் கல்யாணம் அதிர்ச்சித்தகவல்.

    ReplyDelete
  13. தடை இல்லாமல் தடைகள் வருகிறதோ இலங்கைக்கு

    ReplyDelete
  14. ஹிஹி அவங்க உண்மையிலேயே கல்யாணம் கட்டலயா????????
    ஆனால் தை முதலாம் திகதி புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை! ஏன் கலைஞர் மாற்றம் கொண்டு வந்தார் ஏதாவது வலிதான காரணம் இருக்கிறதா? தொன்று தொட்டு வரும் காலம் முதல் சித்திரை புதுவருடபிறப்பென்றுதானே இருந்து வந்தது!
    கடைசி நல்லாயிருக்கு
    ஃ இது இலங்கையின் "தடை செய்யப்பட்ட" காலப்பகுதி போல!! ஃ
    ஓட்டும் போடுகிறேன்!

    ReplyDelete
  15. மூன்றும் அருமை.. தொடருங்கள்

    இங்கே,
    தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
    http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete
  16. பாஸ்,,புதிய முயற்சி அருமை...தரங்க என்ன ஆச்சோ தெரியல

    ReplyDelete
  17. ஹா ஹா....முதல் படமே காமெடி கும்மி...

    ReplyDelete
  18. விஞ்ஞான வளர்ச்சியின் அசிங்கம் !

    ReplyDelete
  19. ////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    mமுதலாவது போட்டோ.... ஹா... ஹா.... செம காமெடி!
    /// வாங்க பாஸ் ...

    ReplyDelete
  20. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    ரெண்டாவது சிந்தனையும் அருமை! பொருத்திருந்து பார்ப்போம்
    /// ஆமாம் இவர்கள் காமெடியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

    ReplyDelete
  21. ////# கவிதை வீதி # சௌந்தர் said...

    இது அநியாயங்க...போட்டோவில் எப்படியெல்லாம் விளையாடுராங்க பாருங்க...
    ////வாங்க பாஸ்,,,,எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ...

    ReplyDelete
  22. ///# கவிதை வீதி # சௌந்தர் said...

    இன்றைய தங்கள் பதிவும் அருமை
    // நன்றி நண்பரே ...

    ReplyDelete
  23. ///வை.கோபாலகிருஷ்ணன் said...

    மூன்றிலும் தங்கள் ஆதங்கம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுக்கு நன்றி.
    /// நன்றி ஐயா கருத்துக்கு ,,,

    ReplyDelete
  24. ///A.R.ராஜகோபாலன் said...

    முக்கனி பதிவு சகோ, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை , கற்பக கலவை
    /// நன்றி நண்பரே ..

    ReplyDelete
  25. ////தங்கம்பழனி said...

    இவங்க காமெடிக்கு ஒரு அளவே கிடையாதா?
    /// உண்மை தான் இது முடிகிற போல இல்லை ...

    ReplyDelete
  26. ///ஈரோடு தங்கதுரை said...

    நல்ல பதிவு ... வாழ்த்துக்கள்.. !
    /// நன்றிங்க ..

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said...

    இப்படியெல்லாமா செய்வாங்க!

    நல்ல பதிவு!
    // நன்றி ஐயா ...

    ReplyDelete
  28. ///தமிழ் உதயம் said...

    முக்கனி தித்திப்பு.
    /// வாங்க சார் ...

    ReplyDelete
  29. நிரூபன் said...

    மச்சி, அவசரமா வெளியே போகனும், ஓட்டு மட்டும் குத்திப் போட்டு போறேன். கருத்துக்களோடு இரவு வருகிறேன்./// தனியாக தானே போகிறீங்க ...)

    ReplyDelete
  30. ////இராஜராஜேஸ்வரி said...

    கல்யாணமாம் கல்யாணம் அதிர்ச்சித்தகவல்.
    /// வாங்க சகோதரி ...

    ReplyDelete
  31. ////யாதவன் said...

    தடை இல்லாமல் தடைகள் வருகிறதோ இலங்கைக்கு/// ஹிஹிஹி தடை தடை தடை .....)

    ReplyDelete
  32. ////கார்த்தி said...

    ஹிஹி அவங்க உண்மையிலேயே கல்யாணம் கட்டலயா????????
    ஆனால் தை முதலாம் திகதி புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை! ஏன் கலைஞர் மாற்றம் கொண்டு வந்தார் ஏதாவது வலிதான காரணம் இருக்கிறதா? தொன்று தொட்டு வரும் காலம் முதல் சித்திரை புதுவருடபிறப்பென்றுதானே இருந்து வந்தது!
    கடைசி நல்லாயிருக்கு
    ஃ இது இலங்கையின் "தடை செய்யப்பட்ட" காலப்பகுதி போல!! ஃ
    ஓட்டும் போடுகிறேன்!////


    எனக்கும் சந்தேகம் தான்...

    இருந்தாலும் சித்திரை வருஷ பிறப்பென்பது ஆரியர்களால் கொண்டுவரப்பட்டது... ஆனால் இலங்கையில் தொடர்ந்து சித்திரையில் தான் கடைபிடிக்கிரார்கள்...

    நன்றி பாஸ் கருத்துக்கு...

    ReplyDelete
  33. ////ஈரி said...

    மூன்றும் அருமை.. தொடருங்கள்

    இங்கே,
    தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
    http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html
    /// நன்றி நண்பரே ...

    ReplyDelete
  34. ///மைந்தன் சிவா said...

    பாஸ்,,புதிய முயற்சி அருமை...தரங்க என்ன ஆச்சோ தெரியல
    // நன்றி பாஸ், எதோ மாத்திரை எடுத்துக்கொண்டதாக ஒத்துக்கொண்டுள்ளார்...

    ReplyDelete
  35. ///NKS.ஹாஜா மைதீன் said...

    ஹா ஹா....முதல் படமே காமெடி கும்மி...
    /// வாங்க பாஸ் ...

    ReplyDelete
  36. ///ஹேமா said...

    விஞ்ஞான வளர்ச்சியின் அசிங்கம் !/// உண்மை தான் சகோதரி..கருத்துக்கு நன்றி ...

    ReplyDelete
  37. கலியாணமாம் கலியாணம்; கம்பியூட்டர் திருவிளையாடல் பாஸ்...
    அவ்..

    அப்புறமா அரசியல்... போகப் போக எல்லோரின் சுய ரூபங்களையும் அறிந்து கொள்வதற்கான அரங்கமாகிவிட்டது.

    ஊக்க மருந்து: திருந்தவே மாட்டாங்களா...

    முத்தான மூன்று விடயங்களைத் தந்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.

    ReplyDelete
  38. அம்மா அய்யா ஹிஹி!

    ReplyDelete