ராவிட்டின் ஓய்வு - ஒரு ரசிகனாக..

எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம்  தொடங்கும் போது இலங்கை அணியின் ரசிகனாக தான் இருந்தேன். ஆனால் சிறிது காலங்களிலே  என் ரசனை இந்திய அணியின் பக்கம் திரும்பிவிட்டது. இதற்க்கு  காரணங்களில் ஒன்று,  அன்று இந்திய அணியின் மும் மூர்த்திகளாக கலக்கிக்கொண்டு இருந்த சச்சின், கங்குலி,  ராவிட் போன்றவர்கள்..
                                                             (ராவிட் ,சின்ன ராவிட்)
பொதுவாக சச்சினின் ஆட்டம் பிடிக்கும், கங்குலியின் ஆக்ரோசம் பிடிக்கும் ஆனால் இவர்கள் இருவரையும் தாண்டி ராவிட்டின் ஆட்டம் மட்டுமல்லாது, அவரின்  மைதானத்துக்கு வெளியிலான செயற்பாடுகள் கூட  எந்த  ஒரு சாமானிய கிரிக்கெட் ரசிகனுக்கும் அவர் மீதான மரியாதையை  உயர்த்தும். 

கவாஸ்கர், கபில் தேவ், அசாருதீன், கங்குலி ,கும்ளே போன்ற பிரபல வீரர்கள் இந்திய அணியில் இருந்திருந்தாலும் சச்சினுக்கு அடுத்த இடம் ராவிட்டுக்கு  தான்.

இந்திய கிரிக்கெட் பிரபலங்களில் அதிகம் சர்ச்சைகளில் சிக்கி  கொள்ளாத வீரர்களில் ராவிட்டும் முதன்மையானவர். நான் அறிந்து ராவிட் சிக்கிக்கொண்ட சர்ச்சைகளாக- பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றிலே கங்குலிக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற ராவிட், ஆடுகளத்தில் சச்சின் 194 ஓட்டங்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கும் போது இனிங்சை  இடை நிறுத்துவதாக அறிவித்தது.  மற்றையது, சிம்பாவேக்கு எதிரான போட்டியோன்றிலே பந்தின் மீது தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜெல் என்ற திராவகத்தை தடவியது. ஆனால் என்னை பொறுத்த வரை இவை இரண்டும் ராவிட் வேண்டுமென்றே செய்தாரா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.

1996 ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக  தனது முதலாவது  ஒருநாள் போட்டி பயணத்தை தொடங்கிய ராவிட்டால் தொடர்ந்து பிரகாசிக்க முடியவில்லை. அந்த போட்டி உட்ப்பட அவர்  விளையாடிய முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களாக 3, 4, 3, 11, 13 . அன்றைய பொழுதுகளிலே யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா, இவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைவர் என்ற மகுடத்தை சூடிக்கொள்வார் என்று!
இவ்வாறாக ஆமை வேகத்தில் தொடங்கிய ராவிட்டின் ஒருநாள்  போட்டிகளின் பயணம் அவரின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பின் மூலம்  அதற்கான பலனை பெற்றுக்கொண்டார். ஆம்! அதுவரை ஆமை வேகத்தில் நகர்ந்த ராவிட் தொன்னூற்று ஒன்பதுகளின் பின்னர்  முயல் வேகத்தில் பாய தொடங்கினார். அந்த ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண தொடரிலே அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற  சாதனையையும் தன்னகத்தே பதிவு செய்து கொண்டார். (461 ஓட்டங்கள்  65.85 என்ற சராசரியுடன்)

99 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியே ராவிட் ஒருநாள் போட்டிகளில் அதி சிறப்பாக விளையாடிய காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட  காலப்பகுதியில் 210 போட்டிகளில் விளையாடி 7134 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ராவிட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற பன்னிரண்டு சதங்களிலே பத்து சதம் இக்கால பகுதியில் பெறப்பட்டதாகும். அதே போல இன்னுமொரு ஆச்சரியமான விடயம், பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ராவிட் பெற்றுக்கொண்ட சதங்கள் வெறும் பன்னிரண்டு தான். ஆனால் இவர் பெற்ற அரை சதங்களின் எண்ணிக்கை 83 அதாவது சச்சினுக்கு அடுத்தபடியாக. (இன்சமாமும் இதே அளவு தான்).  மற்றும்  இதுவரை   டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலே பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்து வீரர்களில் ராவிட்டும் ஒருவர். (விரைவில் ஆறாவது வீரராக மகேல ஜெயவர்த்தன அந்த இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது)

அத்துடன் 2003 ஆண்டு  உலகக்கிண்ண போட்டிகள் உட்ப்பட இது வரை 73  ஒருநாள் போட்டிகளிலே ராவிட் விக்கெட் காப்பாளராகவும் இருந்துள்ளார்.

2005 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அணியின் தலைவர் என்ற மணி மகுடம் கங்குலியிடம் இருந்து ராவிட்டின் தலையை அலங்கரிக்கிறது.    அதன் பின் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினாலும், என்னை பொறுத்த வரை அவரின் துடுப்பாட்டம் மங்கி சென்றது இதன் பின்னரான காலப்பகுதியில் தான். முக்கியமாக  இரண்டாயிரத்து  ஆறுகளின்  பின்னர்!

79 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை  தாங்கிய ராவிட்டின் காலப்பகுதியிலே இந்திய அணி  42 வெற்றிகளையும் 33 தோல்விகளையும் பெற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு தலைமை வகித்தவர்களில் தோனிக்கு பிறகு இது தான் சிறந்த பெறுபேறாக கருதப்படுகிறது.


 2007 ம் ஆண்டு இடம்பெற்ற உலககிண்ண தொடரிலே  ராவிட் தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியுடன் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறியது. இங்கு தான் தொடங்கியது  ஒருநாள் போட்டிகளிலே ராவிட்டின் இறங்குமுகம்! இது தான் ராவிட் தலைமையின்  மிக நெருக்கடியான காலப்பகுதி.  அதன் பின்னர் 2007 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின்னர் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்.  இதே ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலே ராவிட்டின் மோசமான ஆட்டத்தை காரணம் காட்டி அணியில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பின் அவருக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. காரணம் அவரின் இடத்தை நிரப்ப  புதிய திறமை வாய்ந்த  இளம் வீரர்கள் அணிக்குள் வந்து சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதுவரை ராவிட் இந்திய அணிக்காக விளையாடிய 344  ஒருநாள் போட்டிகளிலே அவ்வணி 160 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ் வெற்றிகளின் போதான ராவிட்டின் துடுப்பாட்ட சராசரி 51 - இது ஒன்றே  போதும் அணியின் வெற்றியில் ராவிட்டின் பங்காளிக்கு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள.

இன்று 38 வயசை கடந்து  நிற்கும் ராவிட் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உண்மையிலே இந்திய அணியின் ரசிகர்களை பொறுத்தவரை இது மிக வருத்தமான செய்தி தான். இனி அந்த நீல நிற உடையுடன் ராவிட்டை மைதானத்தில் காண முடியாது.  ஆனால் ராவிட் எடுத்த முடிவு சரியானதே. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இனிமேல்  ராவிட்டின் பங்களிப்பு இந்திய அணிக்கு தேவை இருக்காது. ஏனெனில், பல திறமை வாய்ந்த இளம் வீரர்களே அணியில் இடம் கிடைக்காது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களுக்கு வழி விடுவதே சிறந்தது.


                                                              (விடை பெரும் தருணம்)
அதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலே ராவிட்டுக்கு வாய்ப்பளித்து அவரை கவுரவமாக விடைபெற  வகை செய்த  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு-தெரிவுக்குழுவினருக்கு   பாராட்டுக்கள். ஆனாலும், அவரின் இறுதி தொடரையோ இல்லை இறுதி போட்டியை தானோ  வென்று,  அந்த வெற்றியை அவருக்கு  சமர்ப்பிக்க இந்திய அணி தவறியதை இட்டு வருத்தம் தான்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ராவிட்டின் இடத்தை நிரப்ப ஹோலியாலோ இல்லை ரோகித் சர்மாவாலோ முடியலாம்.  ஆனால் இன்னும் சில வருடங்களில் ராவிட் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் போது,  அது இந்திய அணிக்கு  மிக பெரிய  இடைவெளியை ஏற்ப்படுத்தி  செல்லும்  என்பது  மட்டும்  நிச்சயம்.

இன்று அணிக்குள் வந்து சற்று பிரபலமானவுடனே  அதை வைத்து பெண்கள், நடிகைகள் என்று கூத்தடிக்கும்  வீரர்கள் மத்தியில் ராவிட்.............கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! (முக்கியமாக இறுதி நிமிடங்களை பாருங்கள்)


'கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பார்கள்' ஆம்! ராவிட் போன்ற வீரர்கள்  இருக்கும் வரை அது சத்தியமான வார்த்தை தான்.

34 comments:

 1. என்னது கிரிக்கெட்டா? நமக்குத்தான் கிரிக்கெட்டுல ஒரு எழவும் புரியாதே! ம்...... என்ன பண்ணலாம்? எதுக்கும் தெரிஞ்சமாதிரி காட்டிக்கிட்டு கமெண்ட்ஸ் போடுவோம்!

  ReplyDelete
 2. ஆறாம் பந்து அவ்வ்வ்வவ்வ்வ் அவுட்டே....

  ReplyDelete
 3. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  என்னது கிரிக்கெட்டா? நமக்குத்தான் கிரிக்கெட்டுல ஒரு எழவும் புரியாதே! ம்...... என்ன பண்ணலாம்? எதுக்கும் தெரிஞ்சமாதிரி காட்டிக்கிட்டு கமெண்ட்ஸ் போடுவோம்!//


  ஹா ஹா ஹா ஹா நீங்களும் நம்ம ஆளுதானா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 4. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  என்னது கிரிக்கெட்டா? நமக்குத்தான் கிரிக்கெட்டுல ஒரு எழவும் புரியாதே! ம்...... என்ன பண்ணலாம்? எதுக்கும் தெரிஞ்சமாதிரி காட்டிக்கிட்டு கமெண்ட்ஸ் போடுவோம்!//


  ஹா ஹா ஹா ஹா நீங்களும் நம்ம ஆளுதானா ஹா ஹா ஹா ஹா....////

  அப்போ, மனோ சார், உங்களுக்கும் கிரிக்கெட் சூனியமா?

  ReplyDelete
 5. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்.. டிராவிட்டையும்..! பகிர்வுக்கு நன்றி சகோதரரே..!

  ReplyDelete
 6. கந்தசாமி சார், கிரிக்கெட் பத்தி எதுவுமே தெரியாவிட்டாலும், ட்ராவிட் பத்தி நீங்க எழுதியிருந்ததைப் படிக்கும் போது பெருமையா இருந்திச்சு!

  இன்னைல இருந்து நானும் அவரோட ரசிகன் தான்! காரணம் உங்க பதிவு + அதன் விளைவு!!

  ReplyDelete
 7. நன்றி மனோ ,தங்கம் பழனி மற்றும் மணி சார் ...

  ReplyDelete
 8. முடிந்தால் யாராவது தமிழ் மணத்தில் இணைத்துவிடுங்கள் ...

  ReplyDelete
 9. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 10. ஒரு பெரும்சுவர் ஐ இழந்துவிட்டோம்..

  ReplyDelete
 11. பல இக்கட்டான சமயங்களில் அணியை சரிவிலிருந்து மீட்ட பெருமை டிராவிடை சேரும்!உலக கிரிகட் ஜென்டில்மேன்களின் வரிசையில் நிச்சயம் இவருக்கு இடமுண்டு!

  ReplyDelete
 12. ஒரு நல்ல வீரர். ம்ம்ம் வயதானால் எல்லோருக்கும் இது சகஜம் தானே.

  ReplyDelete
 13. //கவாஸ்கர், கபில் தேவ், அசாருதீன், கங்குலி ,கும்ளே போன்ற பிரபல வீரர்கள் இந்திய அணியில் இருந்திருந்தாலும் சச்சினுக்கு அடுத்த இடம் ராவிட்டுக்கு தான்.//

  நிச்சயமாக.. ட்ராவிட் இந்திய கிரிக்கட்டில் மறக்கமுடியாத ஒரு பெயர்,, நானும் இவரின் ரசிகந்தான்..

  அருமையான பதிவு,,

  ReplyDelete
 14. நானும் ஒரு பதிவை போட்டு பீல பன்னிக்கிட்டு இருக்கன்..நீங்களும்..போட்டு ...பீலிங்கை அதிகமாக்கிட்டீங்க........நான் பீல் பன்னுவது ஒரு நாள் போட்டிகளில் ஒய்வுக்கு அல்ல..இன்னும் சில ஆண்டுகளில் அவரின் ஆட்டத்தை முழுமையாக காணமுடியாதே...........கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணிமேல் இருந்த ரசனை இனி எனக்கு குறைந்துவிடும்............

  ReplyDelete
 15. ராவிட் போன்ற கனவான் வீரர்..இனி கிடைப்பாரா என்பது சந்தேகமே..............

  ReplyDelete
 16. வணக்கம் பாஸ்..

  ராவிட்டின் கிரிக்கட் வாழ்க்கையினை ஆண்டு வாரியாக அசத்தலான அலசியிருக்கிறீங்க.

  திறமையான வீரர்களின் இடத்தினை யாராலும் நீக்க முடியாது என்பது உண்மை தான்.

  ReplyDelete
 17. என்னையா எல்லாருக்கும் என்னை போல கிறிக்கற் பிடிக்கேல ஆனா எனக்கு கந்தசாமிய பிடிக்கும்..ஹி ஹி ஹி

  ஓட்டு போட்டாச்சு மாப்பிள...

  ReplyDelete
 18. மச்சி..ஒரு வேலையா நிக்கிறன்....அப்பறம் வாரன் ஓட்டு போட......

  ReplyDelete
 19. ராவிட் குறித்து அருமையான ஞாபக பகிர்வு.

  ReplyDelete
 20. மிகவும் அருமையான வீரர் .. அதைவிட அருமையான மனிதர்

  ReplyDelete
 21. எனக்கும் பிடித்த விளையாட்டு வீரர்

  ReplyDelete
 22. //ராவிட் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உண்மையிலே இந்திய அணியின் ரசிகர்களை பொறுத்தவரை இது மிக வருத்தமான செய்தி தான்.//

  ஆமாம்.

  ReplyDelete
 23. நல்ல மட்டையடி வீரர்,நல்ல மனிதர் பற்றிய நல்ல பகிர்வு.

  ReplyDelete
 24. ஒருநாள் போட்டிகளில் டிராவிட் இந்தியா அணியில் இரண்டாவது அதிவேக அரை சதத்தை அடித்த வீரர்

  ReplyDelete
 25. மிக மிக அருமையான பதிவு
  கொடுத்த தகவல்களும் கொடுத்த விதமும் அருமை
  ரசித்துப் படித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. இவரை எனக்கு பிடிக்காமல் போனது கப்டனாக இருந்த தருணங்கள் .

  ReplyDelete
 27. வணக்கம் சிறந்த பதிவு தோழர்

  ReplyDelete
 28. //ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ராவிட்டின் இடத்தை நிரப்ப ஹோலியாலோ இல்லை ரோகித் சர்மாவாலோ முடியலாம்.

  கண்டிப்பா முடியாது... டிராவிட் உச்சத்தில் இருந்த 98-2004 கலகட்டத்தில் அவர் விளையாடியதை போல இவர்களால் என்றுமே விளையாட இயலாது ...

  ReplyDelete