மனிதாபிமானம் அற்றவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகள்.

உலகின் பொதுவான  சர்வதேச சட்டவிதிகளுக்கமைய சில பிரதேசங்களுக்குள் யாராக இருந்தாலும் ஆயுதங்கள் சகிதம் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  உதாரணமாக பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், வைத்தியசாலைகள்..

ஆனால் இலங்கையை பொறுத்த வரை பல தசாப்தங்களாகவே இது விதிவிலக்கு. இலங்கை அரசோ, இராணுவமோ  இவற்றை சற்றும் சாட்டை  செய்வதில்லை.  நான் கல்வி கற்ற பாடசாலைக்குள் இராணுவம் எத்தனையோ தடவைகள் ஆயுதங்களுடன் பிரவேசித்ததை கண்டுள்ளேன்.  அதே போல இறுதி யுத்தத்தில் இவர்கள் வைத்தியசாலைகளையும் இராணுவ இலக்காக கொண்டு செயற்ப்பட்டத்தை  இன்று உலகே  அறியும்.

ஆனால் இலங்கை இராணுவம் மட்டும் தானா இப்படி... 

அது 1987 ம் ஆண்டு  இதே நாள், திடீரென யாழ் போதனா வைத்தியசாலைக்குள் உள் நுழைந்த  'அமைதி காக்கும் படையினர்' என்ற போர்வையில் இலங்கைக்குள் உள் நுழைந்திருந்த ராஜீவ் படைகள், அவ் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள் உட்பட அறுபத்தி எட்டு பேரை ஈவு இரக்கம் அற்று கொலை வெறியோடு சுட்டுத்தள்ளினார்கள்.  யார் மீதோ உள்ள வெறுப்பை கோழைத் தனமாக அப்பாவி உயிர்கள் மீது காட்டினார்கள். 

இதில் மிக கொடுமையான விடயம் என்னவென்றால், எத்தனையோ  இந்திய இராணுவ சிப்பாய்கள் புலிகளுடன் மோதி குற்றுயிராக வைத்தியசாலைக்குள் கொண்டு வரப்பட்ட போது இதே வைத்தியர்களும் தாதிகளுமே அவர்கள் உயிரை காப்பாற்றி  மறு வாழ்வு கொடுத்தவர்கள். 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், "காந்தி தேசம் என்ற பெயருக்கும்" தலைக் குனிவை ஏற்ப்படுத்தும் விதமாக அன்று ஈழத்திலே இந்திய இராணுவம் செயற்ப்பட்டதற்கு இது ஒரு உதாரணம்.. இதை விட இன்னும் எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. ஒரு வேளை இவையெல்லாம் காணொளி வடிவில் அன்றே வெளி வந்திருந்தால் உலகையே உலுப்பியிருக்கும். ஏன், இவற்றையெல்லாம்  வழிநடத்திய ராஜிவின் இறப்பு  இந்தியர்களுக்கே மனவருத்தத்தை கொடுப்பதாக அமைந்திருக்காது.


இன்று  இருபத்திநான்கு வருடங்கள் ஓடி விட்டது. ஈழ தமிழனாக பிறந்துவிட்டால் நீதி என்ற ஒன்றை என்றுமே எதிர்பார்க்க முடியாது என்பதற்கு அமைய, எம்மால் அந்த உயிர்களுக்கு இன்று அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும்.

இன்று எந்த நேரத்திலும் ஈழ தமிழர்கள் மீது தமது வஞ்சகத்தை தீர்க்க துடிக்கும் சோனியாவுக்கும், சிதம்பரத்துக்கும், சுப்பிரமணிசுவாமிக்கும் ஏனையவர்களுக்கும்  இந்த விடயம் நன்றாகவே தெரியும்.  ஆனால்   ராஜிவின் கொலைக்காக கண்ணை மூடிக்கொண்டு  அந்த மூன்று உயிர்களை தூக்கில்  ஏற்ற துடிக்கும் காங்கிரசும், அதன் அடிவருடிகளும் இந்த சம்பவத்தை பொறுப்பேற்க முடியுமா? இழந்து போன அந்த உயிர்களை திருப்பி கொடுக்க முடியுமா? அந்த உயிர்களின் உறவுகளுக்கு இவர்கள் சொல்லப்போகும் பதில் என்ன?

22 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வலிகளுடன் தொடரும் இருபத்திநான்காவது தீபாவளித் திருநாள்


    http://eelampakkam.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  3. இரவு வணக்கம்!வலிக்கிறது.இருபத்து நான்கு வருடங்கள்,இல்லையா?(இன்று பதின்நான்கு வருடங்கள் ஓடி விட்டது.)

    ReplyDelete
  4. ///Yoga.S.FR said...

    இரவு வணக்கம்!வலிக்கிறது.இருபத்து நான்கு வருடங்கள்,இல்லையா?(இன்று பதின்நான்கு வருடங்கள் ஓடி விட்டது.)// ஆமாம் ஐயா மாற்றிவிடுகிறேன் .

    ReplyDelete
  5. அத்தனை காங்கிரஸ் நாய்களுக்கும் இந்தப் பதிவை நோட்டிசாக அடித்துக் கொடுக்கணும்...

    ReplyDelete
  6. எத்தனை பேரை கொன்றார்கள். இலங்கைக்குள் போரிட்டோம் அதற்கு காரணமிருக்கிறது.. எங்கிரந்தோ வந்த பரதேசிகளுடன் எமக்கென்ன இருந்தது... கொலை வெறிக் கூட்டம்...

    என்றைக்கும் நாசமாகத் தான் போவார்கள்

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

    ReplyDelete
  7. ஈழத்தவனின் துயரமாக பல கதைகள் மறைந்து போகும் என நினைப்பவர்களுக்குப் புரிவதில்லை நம் நினைவுகளில் பலரின் வேதனை இழப்புக்கள் கலந்து கிடக்குது என்று.

    ReplyDelete
  8. Boss
    they didn't just go and kill people.
    Ask your ltte boys what happened around Jaffna Hospital and write.

    ReplyDelete
  9. வணக்கம் கந்தசாமி
    மதி சொல்வதைப்போல் அவர்களுக்கு இப்பதிவை நோட்டீஸ் அடித்துக்கொடுக்கவேண்டும்... இதைப்பற்றி இன்றுவரை யாராவது கதைத்தார்களா?? ஏன்னா இறந்தவர்கள் தமிழர்கள்...

    ReplyDelete
  10. இவர்களை என்ன செய்வது

    தமிழர்கள் இவ்வளவு கேவலமாக போய்விட்டார்களா

    ReplyDelete
  11. மனதைக் கனக்க வைக்கும் நினைவுகள் கந்தசாமி அண்ணே! தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவு போலும்!

    ReplyDelete
  12. அன்பின் சகோ!

    இத் துயரச் செய்தி அன்றே
    உலகுக்குத் தெரிந்திருந்தால் குறைந்த
    பட்சம் தமிழகத்திற்கு மட்டு மாவது
    அறியச் செய்யாமல் விட்டது
    மாபெரும் தவறு!

    இங்கே பல மாற்றங்கள்
    ஏற்பட்டிருக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ஹூம், பெருமூச்சு விடுவதைத்தவிர என்ன செய்ய முடியுது நம்மால்?

    ReplyDelete
  14. //
    ராஜிவின் கொலைக்காக கண்ணை மூடிக்கொண்டு அந்த மூன்று உயிர்களை தூக்கில் ஏற்ற துடிக்கும் காங்கிரசும், அதன் அடிவருடிகளும் இந்த சம்பவத்தை பொறுப்பேற்க முடியுமா? இழந்து போன அந்த உயிர்களை திருப்பி கொடுக்க முடியுமா? அந்த உயிர்களின் உறவுகளுக்கு இவர்கள் சொல்லப்போகும் பதில் என்ன?
    //

    செருப்பால அடிச்சா போல கேள்வி இருக்கு

    ReplyDelete
  15. வருத்தப்படுவதைத் தவிர, வேறேதும் செய்யமுடியாத நிலையை எண்ணி வருந்துகிறேன்.

    ReplyDelete
  16. கேள்விகளுக்கெல்லாம் பதில்
    சொல்லமுடியாத நிலைதான்
    மிஞ்சுகிறது.

    ReplyDelete
  17. எனது வேதனையின் கண்ணீர் அஞ்சலி....

    ReplyDelete
  18. //ஈழ தமிழனாக பிறந்துவிட்டால் நீதி என்ற ஒன்றை என்றுமே எதிர்பார்க்க முடியாது என்பதற்கு அமைய, எம்மால் அந்த உயிர்களுக்கு இன்று அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும். //

    சங்கடமாக இருக்கிறது.

    ReplyDelete
  19. வணக்கம் பாஸ்,

    காலத்திற்கேற்ற காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  20. உலகின் பொதுவான சர்வதேச சட்டவிதிகளுக்கமைய சில பிரதேசங்களுக்குள் யாராக இருந்தாலும் ஆயுதங்கள் சகிதம் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், வைத்தியசாலைகள்..
    //


    அது சரி, ஆனால் இலங்கையில் சண்டை நடந்த போது இராணுவத்தினர் தேடித் தேடிக் குண்டு வீசிக் கொல்வது இந்த இடங்களைத் தானே...


    ஹி...ஹி...
    பாவிங்க...

    ReplyDelete
  21. எங்களின் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது பாஸ்..


    காலங்கள் மாறலாம், ஆனால் நெஞ்சில் படிந்த வடுக்களை இலகுவில் அழிக்க முடியாதல்லவா.

    ReplyDelete